'சூப்பர் 4' சுற்றில் பாகிஸ்தானை வீழ்த்தி இந்தியா வெற்றி
ஆசிய கோப்பை கிரிக்கெட் போட்டி பாகிஸ்தானுக்கு எதிரான போட்டியில் இந்தியா வெற்றிப்பெற்றுள்ளது.
17ஆவது ஆசிய கோப்பை கிரிக்கெட் போட்டி (டி20) ஐக்கிய அரபு அமீரகத்தில் உள்ள துபாய் மற்றும் அபுதாபியில் நடைபெற்று வருகின்றது.
பாகிஸ்தான் அணி
சூப்பர் 4 சுற்றின் 2ஆவது ஆட்டம் துபாயில் நேற்று(21) நடைபெற்றது.
நாணயசுழற்சியில் வெற்றிப்பெற்ற இந்திய அணி முதலில் களத்தடுப்பை தேர்வு செய்தது. முதலில் களமிறங்கிய பாகிஸ்தான் அணி 20 ஓவரில் 5 விக்கெட் இழப்புக்கு 171 ஓட்டங்கள் எடுத்தது. இதையடுத்து, 172 ஓட்டங்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் இந்தியா களமிறங்கியது.
இந்தியத் தொடக்க வீரர்கள் அபிஷேக் சர்மா மற்றும் சுப்மன் கில் ஆகியோர் பாகிஸ்தான் அதிரடியாக விளையாட தொடங்கினர்.
இந்தியா வெற்றி
அபிஷேக் சர்மா அதிரடியாக அரைசதம் அடித்தார். சுப்மன் கில் 47 ஓட்டங்களிலும், சூர்யகுமார் யாதவ் ஓட்டங்கள் ஏதும் எடுக்காமலும் ஆட்டமிழந்தனர்.
தொடர்ந்து, திலக் வர்மா களமிறங்கினார்.
அபாரமாக ஆடிக்கொண்டிருந்த அபிஷேக் சர்மா 74 ஓட்டங்களிலும் ஆட்டமிழந்தார். இதையடுத்து சஞ்சு சாம்சன் களத்திற்கு வந்தார்.
இறுதியில், இந்திய அணி 18.5 ஓவர்களில் 4 விக்கெட்டுகளை இழந்து 174ஓட்டங்கள் எடுத்து, 6 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.




