ஹர்திக் பாண்டியாவின் நோ லுக் துடுப்பாட்டம்: பங்களாதேஸை வெற்றி கொண்ட இந்தியா
சுற்றுலா பங்களாதேஸ் ஆடவர் அணிக்கும் இந்திய அணிக்கும் இடையிலான முதலாவது 20க்கு20 கிரிக்கட் போட்டியில் இந்திய அணி 7 விக்கட்டுக்களால் வெற்றியீட்டியுள்ளது.
குவாலியூரில் நடைபெற்ற இந்தப்போட்டியில் முதலில் துடுப்பாடிய பங்களாதேஸ் அணி 19.5 ஓவர்களின் முடிவில் அனைத்து விக்கட்டுக்களையும் இழந்து 127 ஓட்டங்களை பெற்றுக்கொண்டது.
பங்களாதேஸ் அணி சார்பில் மெய்ஹிடி ஹசன் 35 ஓட்டங்களை பெற்றுக்கொடுத்தார்.
இந்திய அணி
மேலும், பந்து வீச்சில் இந்திய அணி சார்பில் அர்ஸ்டீப் சிங் 3.5 ஒவர்களில் 14 ஓட்டங்களை கொடுத்து 3 விக்கட்டுக்களை கைப்பற்றியுள்ளார்.
இதனையடுத்து துடுப்பாடிய இந்திய அணி 11.5 ஓவர்களில் 3 விக்கட்டுக்களை மாத்திரம் இழந்து 132 ஓட்டங்களை பெற்று போட்டியில் வெற்றியீட்டியது.
இதில் ஹர்திக் பாண்டியா 16 பந்துகளை எதிர்கொண்டு 2 ஆறு ஓட்டங்கள், 5 நான்கு ஓட்டங்கள் அடங்கலாக 39 ஓட்டங்களை பெற்றுக்கொடுத்தார்.
ஹர்திக் பாண்டியா
இந்த ஆட்டத்தில், தஸ்கின் அஹமது வீசிய கூர்மையான மேலெழுந்த பவுண்ஸர் பந்தை சிறப்பாக கையாண்டு, விக்கட் காப்பாளருக்கு மேலாக செல்லும் வகையில் “நோ லுக்” துடுப்பாட்டத்தை மேற்கொண்டமை ரசிகர்கள் மத்தியில் வரவேற்பை பெற்றது.
Just the start we wanted! Enjoying every moment out there. Thanks for the love Gwalior ??❤️ pic.twitter.com/SBkugjsAXr
— hardik pandya (@hardikpandya7) October 6, 2024
இதன்போது பாண்டியா, தாம் குறித்த பந்தை சிறப்பாக கையாண்டதை அறிந்தநிலையில், அதனை திரும்பிப்பார்க்காமல், பந்துவீச்சாளரையே பார்த்துக்கொண்டிருந்தமை காணொளியாக அதிகம் பகிரப்படுகிறது.
No look shot by Hardik pandya?
— jackpopuri (@jackpopuri1717) October 6, 2024
Swag level on this shot.#Hardikpandya pic.twitter.com/4vTio9ByZd
மேலும் கிரிக்கெட் உள்ளிட்ட விளையாட்டு செய்திகளை பார்வையிட நமது WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW |