இந்திய - பாகிஸ்தானின் கிரிக்கெட் போட்டிகள் குறித்து வெளியான தகவல்
2024 - 2027ஆம் ஆண்டு வரையான காலப்பகுதியில், இந்தியா மற்றும் பாகிஸ்தானுக்கு இடையிலான போட்டிகள் நடுநிலையான இடத்தில் நடைபெறும் என்று சர்வதேச கிரிக்கெட் சம்மேளனம் (ICC) என்று தெரிவித்துள்ளது.
இட ஏற்பாடுகள்
இதில், 2025ஆம் ஆண்டு பெப்ரவரி மற்றும் மார்ச்சில் பாகிஸ்தானில் நடைபெறவிருக்கும் ஐசிசி ஆண்கள் செம்பியன்ஸ் கிண்ணம், அதே போன்று 2025இல் இந்தியா நடத்தும், சர்வதேச கிரிக்கெட் சம்மேளனத்தின் பெண்கள் கிரிக்கெட் உலகக் கிண்ணப்போட்டிகள், மற்றும் 2026இல் இந்தியாவும் இலங்கையும் நடத்தும் சர்வதேச கிரிக்கெட் சம்மேளன ஆண்கள் 20க்கு 20 உலகக் கிண்ணப்போட்டிகள் என்பன அடங்கும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
அதேவேளை, 2028ஆம் ஆண்டில் சர்வதேச கிரிக்கெட் சம்மேளனத்தின் பெண்கள் 20க்கு 20 உலகக் கிண்ணத்தை நடத்தும் உரிமை பாகிஸ்தானுக்கு வழங்கப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டது. அந்த போட்டிகளிலும் இந்த நடுநிலையான இட ஏற்பாடுகளும் பொருந்தும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதற்கிடையில் 2029ஆம் ஆண்டு முதல் 2031ஆம் ஆண்டு வரையிலான காலகட்டத்தில் சர்வதேச கிரிக்கெட் சம்மேளன மகளிர் சீனியர் போட்டிகளில் ஒன்றை அவுஸ்திரேலியா நடத்த உள்ளது.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |

சீனா, பாகிஸ்தானுக்கு கவலை அதிகரிப்பு., இந்திய விமானப்படைக்கு 3 ISTAR விமானங்கள் வாங்க ஒப்புதல் News Lankasri
