இலங்கைக்கான இந்தியாவின் உதவிகள் தொடரும்! - பசிலை சந்தித்த பின் ஜெய்சங்கர் 'ருவிட்'
இலங்கைக்கான இந்தியாவின் உதவிகள் தொடரும் என்று இந்திய வெளிவிவகார அமைச்சர் எஸ்.ஜெய்சங்கர் தெரிவித்துள்ளார்.
இலங்கையில் நடைபெறும் ‘பிம்ஸ்டெக்’ மாநாட்டில் பங்கேற்பதற்காகக் கொழும்பு வந்துள்ள இந்திய வெளிவிவகார அமைச்சர் இன்று முற்பகல் நிதி அமைச்சர் பசில் ராஜபக்சவை சந்தித்துப் பேச்சு நடத்தினார்.
இலங்கையின் பொருளாதார நிலைமை மற்றும் இந்தியாவின் ஆதரவு தொடர்பில் இதன்போது கலந்துரையாடப்பட்டன என்று தனது ருவிட்டர் பக்கத்தில் ஜெய்சங்கர் குறிப்பிட்டுள்ளார்.
நிதி அமைச்சர் கௌரவ பசில் ராஜபக்ஷ அவர்களுடனான சந்திப்புடன் விஜயம் ஆரம்பம்.
— Dr. S. Jaishankar (@DrSJaishankar) March 28, 2022
பொருளாதார நிலை தொடர்பாகவும் இந்தியாவின் ஆதரவான பதில் நடவடிக்கைகள் குறித்தும் கலந்துரையாடப்பட்டது. அயலுறவுக்கு முதலிடம் கொள்கைமூலம் நாம் தொடர்ந்து வழிநடத்தப்படுவோம். https://t.co/nB18RASdo8
அயலவருக்கு முன்னுரிமை என்ற அடிப்படையில் இலங்கைக்கான உதவி தொடரும் எனவும்
அவர் மேலும் தெரிவித்துள்ளார்.



