இலங்கைக்கு கடன் வழங்க இந்தியா இணக்கம்
இலங்கைக்கு 500 மில்லியன் அமெரிக்க டொலர் கடன் வழங்குவதற்கு இந்தியா இணக்கம் தெரிவித்துள்ளது.
பெற்றோலிய பொருட்களை கொள்வனவு செய்வதற்காக இலங்கை இந்த கடன் தொகையை இந்தியாவிடம் கோரியிருந்தது.
இந்த கோரிக்கைக்கு இந்திய அரசாங்கம் அனுமதி வழங்கியுள்ளது.
இந்த கடனுதவியானது நாட்டின் மின்சக்தி பிரச்சினைக்கு தீர்வினை வழங்கும் என அமைச்சர் உதய கம்மன்பில தெரிவித்துள்ளார்.
இந்த கடன் தொகையைக் கொண்டு எதிர்வரும் மார்ச் மாதம் அளவில் எரிபொருளை இறக்குமதி செய்ய முடியும் என அவர் நம்பிக்கை வெளியிட்டுள்ளார்.
கடந்த 15ம் திகதி இந்திய வெளியுறவு அமைச்சர் ஜெய்சங்கருக்கும், இலங்கை நிதி அமைச்சர் பசில் ராஜபக்சவிற்கும் இடையில் மெய்நிகர் தொழில்நுட்பத்தின் அடிப்படையில் நடைபெற்ற சந்திப்பில் இந்த கடன் தொகை தொடர்பிலான விபரங்கள் பேசப்பட்டுள்ளன.
அண்மையில் இலங்கைக்கு 900 மில்லியன் டொலர் அந்நிய செலாவணி கடன் உதவியை இந்தியா வழங்கியிருந்தமை குறிப்பிடத்தக்கது.
பிரித்தானியாவில் தொழிலாளர்களை விட..வேலையின்மை உதவித்தொகை பெறுவோர் அதிகம் உள்ள பகுதிகள் News Lankasri
பாக்ஸ் ஆபீஸில் பட்டையைக் கிளப்பும் ஜெயிலர் 2! 3 நாட்களில் உலகளவில் செய்துள்ள வசூல் எவ்வளவு? Manithan
Bigg Boss 10: டிடிஎஃப் வாசன் ஆடிய ஆட்டம்... கோட்டை விட்ட போட்டியாளர்கள்! விஜய்சேதுபதி கூறியது என்ன? Manithan