இந்தியாவுடன் தொடர்புடைய விடயத்துக்காக கொழும்பில் இடம்பெறும் முக்கிய சந்திப்பு ( காணொளி)
இலங்கையின் தமிழ் பேசும் அரசியல் கட்சிகள் இன்று கொழும்பில் ஒன்று கூடுகின்றன.
13வது திருத்தத்தை இலங்கை அரசாங்கம் ரத்துச்செய்யலாம் என்ற சந்தேகம் ஏற்பட்டுள்ள நிலையிலேயே இந்த சந்திப்பு இடம்பெறுவதாக தமிழீழ மக்கள் விடுதலைக்கழகத்தின் தலைவரும் தமிழ் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினருமான தர்மலிங்கம் சித்தார்த்தன் எமது செய்திச்சேவைக்கு தெரிவித்துள்ளார்.
இந்த சந்திப்பில் தமிழ் தேசியக்கூட்டமைப்பு, ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் மற்றும் தமிழ் முற்போக்கு முன்னணி உட்பட்ட கட்சிகள் பங்கேற்கின்றன.
இந்திய அரசாங்கம் தொடர்புப்பட்டுள்ள 13வது திருத்தம் தொடர்பில் இந்த சந்திப்பு அமைவதால், இலங்கையின் அரசியலில் இது முக்கிய சந்திப்பாக பார்க்கப்படுகிறது.
இது தொடர்பான செவ்விக்காணல் இதோ -
