மட்டக்களப்பில் சுயேட்சை குழுவாக களமிறங்கும் இளைஞர் யுவதிகள் (Photos)
மட்டக்களப்பு வாகரை கோரளைப்பற்று வடக்கு பிரதேச சபையில் போட்டியிடுவதற்காக, சுயேட்சை குழுவாக இளைஞர் யுவதிகள் தேர்தலில் களமிறங்கியுள்ளனர்.
தமிழ் மக்கள் இயக்கம் மற்றும் நீதிக்கும் சமத்துவத்துக்குமான கனடியர் அமைப்பினரின் பங்களிப்புடன் சுயேட்சை குழுவாக இளைஞர் யுவதிகள் தேர்தலில் களமிறங்கியுள்ளனர்.
வேட்பு மனுத் தாக்கல்
இன்றைய தினம் (20.01.2023) மட்டக்களப்பு தேர்தல் திணைக்களத்தில் தங்களது கட்டுப்பணத்தை செலுத்தியுள்ளதுடன் நாளைய தினம் (21.01.2023) அவர்களது வேட்பு மனுத் தாக்கலை செய்ய உள்ளதாக குறிப்பிட்டுள்ளனர்.
குறித்த சுயேச்சை குழு இலங்கையில் புத்தளம் மற்றும் வன்னி, மட்டக்களப்பு போன்ற இடங்களில் போட்டியிடுகின்றது.
சுயேட்சை குழுவாக களமிறங்கல்
கடந்த காலங்களில் வாகரை பிரதேசத்தில் தங்களுக்கான நீதிகள் மறுக்கப்பட்டதன் காரணமாக தாங்கள் கிராமத்தில் உள்ள இளைஞர் யுவதிகளை உள்வாங்கி தங்களது கிராமத்தில் உள்ள பிரச்சினைகளை தீர்ப்பதற்காக குறித்த தேர்தலில் போட்டியிடுவதாக தெரிவித்துள்ளனர்.
அபிவிருத்தி எனும் போர்வையில் அதிகளவான காணி மற்றும் கிராமத்துக்கு பயன்படாத அபிவிருத்தி திட்டங்களை மேற்கொள்வதன் காரணமாக தங்களது உரிமைகள் மறுக்கப்படுவதால் தாமாகவே களம் இறங்கியுள்ளதாக தெரிவித்துள்ளனர்.

தமிழ் படிக்க ஆசிரியர் இல்லையே என்ற கவலை இனியும் வேண்டாம். uchchi.com இன் இணையவழிக் கற்கை நெறிகளில் இன்றே இணையுங்கள்.

சிலை அரசியல் : அறிவும் செயலும் 1 நாள் முன்

உக்ரைனில் இறங்கிய பிரித்தானியாவின் சேலஞ்சர் 2 டாங்கிகள்! புடின் எச்சரிக்கையை மீறிய நடவடிக்கைகள் News Lankasri

தங்கை திருமணத்தில் 8 கோடிக்கு வரதட்சணை வழங்கிய சகோதரர்கள்! சீர் வரிசையை பார்த்து வியந்த ஊர்மக்கள் News Lankasri
