ஆளும் கட்சியில் இருந்து விலகி சுயாதீனமாக இயங்கும் அணியினரை சந்தித்த சீனத் தூதுவர்
இலங்கைக்கான சீனத் தூதுவர் ஷீ ஷென் ஹொங் (Qi Zhenhong ) திடீரென நாடாளுமன்றத்திற்கு விஜயம் செய்து, ஆளும் கட்சியில் இருந்து விலகி சுயாதீனமாக இயங்கும் அணியினரை சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தியுள்ளார்.
இந்த சந்திப்பு நேற்று நடந்துள்ளதாக இலங்கைக்கான சீன தூதரகத்தின் டுவிட்டர் பக்கத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த சந்திப்பின் போது நாட்டில் ஏற்பட்டுள்ள நிலைமை மற்றும் அது சம்பந்தமாக சீனா, இலங்கைக்கு உதவக் கூடிய விதம் தொடர்பாக கலந்துரையாடப்பட்டுள்ளது.
சீனத் தூதுவருடனான இந்த சந்திப்பில் ஆளும் கட்சியின் சுயாதீன அணியை சேர்ந்த ஏழு நாடாளுமன்ற உறுப்பினர்கள் கலந்துக்கொண்டுள்ளனர். வாசுதேவ நாணயக்கார, அனுர பிரியதர்ஷன யாப்பா, தயாசிறி ஜயசேகர, ஜகத் புஷ்பகுமார, உதய கம்மன்பில, அத்துரலியே ரதன தேரர் உள்ளிட்ட நாடாளுமன்ற உறுப்பினர்கள் இதில் கலந்துக்கொண்டுள்ளனர்.

போலீஸ் நிலையத்தில் மயிலை அடிக்கச்சென்ற கோமதி, ஆதாரத்தை காட்டிய மீனா... பாண்டியன் ஸ்டோர்ஸ் 2 பரபரப்பு எபிசோட் Cineulagam