நாட்டு மக்களுக்கு வழங்கப்படவுள்ள வாய்ப்பு!
அடுத்த வருடம் தேசிய சுதந்திர தின நிகழ்வுகளை காணும் சந்தர்ப்பம் மக்களுக்கு வழங்கப்படும் என எதிர்பார்க்கப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
பொது நிர்வாகம், மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சிமன்ற அமைச்சர் பேராசிரியர் சந்தன அபேரத்ன இதனை தெரிவித்துள்ளார்.
சுதந்திர தின நிகழ்வு
அமைச்சின் கேட்போர் கூடத்தில் நடைபெற்ற சுதந்திர தின நிகழ்வுக்கான ஏற்பாட்டுக் குழுவின் முதலாவது கூட்டத்தில் கலந்துகொண்டு அமைச்சர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.
நாட்டின் பெருமையை வெளிப்படுத்தும் வகையில் மிகப் பிரமாண்டமான முறையில் குறைந்த செலவில் சுதந்திர விழாவை நடத்தத் தீர்மானிக்கப்பட்டுள்ளதாக குறிப்பிட்டுள்ளார்.
அத்துடன், அடுத்த வருடம் சுதந்திர தின நிகழ்வை கொழும்பு சுதந்திர சதுக்கத்தில் நடத்தத் தீர்மானிக்கப்பட்டுள்ளதுடன் சுமார் 1,600 அதிதிகள் கலந்துகொள்ளவுள்ளதாக அவர் கூறியுள்ளார்.