சுதந்திர தினத்தன்று பௌத்த மதத்திற்கு மாத்திரம் முன்னுரிமை: வடமாகாண சபை குற்றச்சாட்டு
யாழ்ப்பாணத்தில் நடைபெறவுள்ள தேசிய சுதந்திர தின நிகழ்வுகளில் பௌத்த மதத்திற்கு மட்டும் முன்னுரிமை வழங்கப்படுவதாக குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.
சுதந்திர தின நிகழ்வுகளுக்கான ஏற்பாடுகளின் போது சிங்கள பௌத்த முறைமைகளுக்கு மட்டும் வட மாகாணசபை முன்னுரிமை அளித்து செயற்படுவது அதிருப்தி அளிப்பதாக தமிழ் அரசியல் கட்சிகள் குற்றம் சுமத்தியுள்ளன.
இது தொடர்பில் வட மாகாண ஆளுனர் அலுவலகத்திற்கு கடிதம் ஒன்று அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.
சிங்க கொடி மற்றும் பௌத்த கொடி
சிங்க கொடி, பௌத்த கொடி என்பன பயன்படுத்தி அலங்காரம் செய்யப்பட்டுள்ளதாகவும், சுதந்திர தினமன்று பௌத்த மத வழிபாடுகள் மட்டும் நடாத்தப்பட உள்ளதாகவும் குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.
அனுராதபுரத்திலிருந்து பெரும் எண்ணிக்கையிலான பௌத்த பிக்குகள் யாழ்ப்பாணத்திற்கு அழைத்து வரப்பட உள்ளதாக சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
இந்த குறைபாடுகளை களைந்து யாழ்ப்பாணத்தின் ஏனைய மதங்களுக்கும் முன்னுரிமை அளித்து தேசிய சுதந்திர தின நிகழ்வுகள் நடாத்தப்பட வேண்டுமென தமிழ் அரசியல் கட்சிகள் கோரியுள்ளன.

தமிழ் படிக்க ஆசிரியர் இல்லையே என்ற கவலை இனியும் வேண்டாம். uchchi.com இன் இணையவழிக் கற்கை நெறிகளில் இன்றே இணையுங்கள்.

சிலை அரசியல் : அறிவும் செயலும் 1 நாள் முன்

தங்கை திருமணத்தில் 8 கோடிக்கு வரதட்சணை வழங்கிய சகோதரர்கள்! சீர் வரிசையை பார்த்து வியந்த ஊர்மக்கள் News Lankasri

மரணத்தில் முடிந்த உல்லாசம்... லண்டன் மாணவி தொடர்பில் வெளிநாட்டு கோடீஸ்வரரின் மகன் ஒப்புதல் News Lankasri

எதிர்நீச்சல் விசாலாட்சி அம்மாவா இது? பாவாடை தாவணியில் சொக்க வைக்கும் அழகி.. வைரலாகும் புகைப்படம் Manithan
