இலங்கைக்கு சுதந்திரம் கிடைத்தநாள்! தமிழினத்திக்கு கைவிலங்கு இடப்பட்டநாள்!

Ranil Wickremesinghe Independence Day Sri Lanka Sri Lankan Peoples Sri Lanka Government
By Ariyam Feb 04, 2024 12:53 AM GMT
Report

ஆங்கிலேயரின் 133 வருடகால ஆட்சிக்குப் பின்னர், 1948இல் இலங்கை சுதந்திரம் பெற்றது. ஆங்கிலேயர் ஆட்சிக்காலத்தில் சுமுக நிலையில் இருந்துவந்த, தமிழ் - சிங்கள இனங்களுக்கிடையேயான தொடர்புகள், சிறிது சிறிதாகச் சீர்கெடத் துவங்கின.

1948, பெப்ரவரி 04, சங்கிலியனின் நந்திக்கொடியை தமது வாகனத்தில் ஏற்றினார். 76, ஆவது தேசிய சுதந்திர தின வைபவம் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க, பிரதமர் ஆகியோர் தலைமையில் கொழும்பு 07, சுதந்திர சதுக்கத்தில் தற்போது இடம்பெற்று வருகிறது.

கி.பி 1505 ஆம் ஆண்டில் போர்த்துக்கேயரினால் இலங்கையின் கரையோர பிரதேசம் கைப்பற்றப்பட்டது. இதனைத்தொடர்ந்து கி.பி 1602 ஒல்லாந்தரின் ஏகாதிபத்தியத்துக்கு இலங்கையர்கள் அடிமைப்பட வேண்டி ஏற்பட்டதுடன், கி.பி 1766 ஆம் ஆண்டளவில் பிரித்தானியரின் ஆக்கிரமிப்பின் காரணமாக கந்த உடரட்ட சிங்களவர்கள் என்று அழைக்கப்படும் மலைநாட்டு சிங்கள மக்களைத் தவிர்ந்த ஏனைய மாகாணங்களில் வாழ்ந்த இலங்கை மக்களும் மீண்டும் அடிமை நிர்வாகத்திற்கு உட்பட வேண்டி ஏற்பட்டது.

கிளர்ச்சிகள் 

கந்த உடரட்ட சிங்களவர்கள் என்று அழைக்கப்படும் மலைநாட்டு சிங்கள மக்களின் பிளவு அதிகார குழுக்களினால் 1815 ஆம் ஆண்டளவில் உடரட்ட என்ற மலையகப் பிரதேசத்தையும் எந்தவித சிரமமுமின்றி பிரிட்டன் தமது நிர்வாகத்திற்கு உட்படுத்தியது.

இலங்கைக்கு சுதந்திரம் கிடைத்தநாள்! தமிழினத்திக்கு கைவிலங்கு இடப்பட்டநாள்! | Independence Day For Sri Lanka

இதன் பின்னர் முழு இலங்கையும் ஆங்கிலேயரின் நிர்வாகத்திற்குள் கொண்டு வரப்பட்டது. இலங்கையர்களின் சுதந்திரப் போராட்டம் இங்கிருந்தே ஆரம்பமாகின்றது என்று கூறலாம். 1818 ஆம் ஆண்டு உடரட்ட என்ற மலையக பெருங்கலகம், 1823 ஆம் ஆண்டு கொஸ்வத்தை கிளர்ச்சி, 1826ஆம் ஆண்டு பிம்தென்னே கிளர்ச்சி, 1835 ஆம் ஆண்டு மல்வத்து விகாரையின் கிளர்ச்சி, 1848ஆம் ஆண்டு மாத்தளை பெருங்கிளர்ச்சி முதலான கிளர்ச்சிகள் ஆரம்பமானவை நாட்டு மக்கள் இழந்த சுதந்திரத்தை மீண்டும் பெற்றுக்கொள்ளும் நோக்கத்துடனேயாகும்.

1818 ஆம் ஆண்டு கிளர்ச்சியினால் சிறிய அளவில் அல்லது ஆங்கிலேயரின் நிர்வாகத்தில் அவர்களது கொடூரமான நிர்வாகத்தில் தளர்வை ஏற்படுத்த வேண்டி ஏற்பட்டது.

1831ஆம் ஆண்டில் அரசாங்க முறையில் மாற்றத்தை ஏற்படுத்தும் நோக்கத்துடன் கோல்புறுக் ஆணைக்குழுவினர், முதல் முறையாக அவர்களது ஆட்சி முறையில் மறுசீரமைப்பு ஆலோசனையை சமர்ப்பித்தனர். பிரித்தானியர்களின் இந்த முயற்சி பெருமளவில் வெற்றியடையவில்லை.

பிரிட்டன் நிர்வாகம்

1848 ஆம் ஆண்டு மாத்தளை பெருங்கிளர்ச்சி ஆரம்பமானதுடன் அது இலங்கை சுதந்திர போராட்டத்தின் இறுதி கிளர்ச்சியாக அமைந்தது. 1796ஆம் ஆண்டில் இலங்கையின் ஒரு பகுதி மாத்திரம் பிரிட்டனின் ஏகாதிபத்தியத்திற்கு அடிமைப்படுத்தப்பட்டு இருந்தது.

அதன் பின்னர் 1815 ஆம் ஆண்டில் முழு நாடும் பிரிட்டனின் நிர்வாகத்திற்கு உட்பட்டிருந்த யுகம் 1948 ஆம் ஆண்டு பெப்ரவரி மாதம் 4 ஆம் திகதி முடிவிற்கு வந்தது. 1948ஆம் ஆண்டு பெப்ரவரி மாதம் 4 ஆம் திகதி இலங்கை மக்களுக்கு சுதந்திரம் கிடைத்தது.

சுதந்திரம் கிடைத்த பின்னர் கடந்த 76 வருட காலப்பகுதியில் 1948 ஆம் ஆண்டு அரசியல் யாப்பு இரத்து செய்யப்பட்ட பின்னர் இரண்டு அரசியல் யாப்புகள் மூலம் நாடு முன்னெடுக்கப்பட்டது. இதில் முதலாவது 1972 ஆம் ஆண்டில் நிறைவேற்றப்பட்ட மக்கள் குடியரசு யாப்பு ஆகும். அத்தோடு இரண்டாவது 1978 ஆம் ஆண்டில் நிறைவேற்றப்பட்ட அரசியல் யாப்பு அமைப்பாகும்.

இலங்கைக்கு சுதந்திரம் கிடைத்தநாள்! தமிழினத்திக்கு கைவிலங்கு இடப்பட்டநாள்! | Independence Day For Sri Lanka

வரலாற்றின் ஆரம்பத்தில் இருந்து தாய் நாட்டின் இறைமைக்காக இரத்தம் சிந்தியமை மற்றும் உயிரை தியாகம் செய்தவர்களின் எண்ணிக்கை அளப்பரியதாகும். பிரிட்டிஷ் ஏகாதிபத்தியம் எமது தாய் நாட்டை கட்டுப்படுத்திய நாள் தொடக்கம் நாட்டு மக்கள் சுதந்திரத்திற்காக மேற்கொண்ட அளப்பரிய அர்ப்பணிப்பின் பெறுபேறே இன்று நாம் அனுபவிக்கும் சுதந்திரமாகும்.

அடிமைப்படுத்தப்பட்ட காலப்பகுதியில் ஏற்பட்ட ஏகாதிபத்திய எதிர்ப்பு கிளர்ச்சி மத்தியில் உயிரை தியாகம் செய்த பத்தாயிரம் பேரான தமிழ், சிங்கள, முஸ்லிம், பறங்கியர் போன்ற நாட்டு பற்றைக் கொண்ட அனைவரதும் அர்ப்பணிப்பையும் நாம் மறந்துவிட முடியாது.  

சமகால அரசாங்கம் 

இதன் பெறுபேறாக எதிர்காலத்தில் பயன்களை பெறுவதற்கு இதற்கான பின்புலத்தை வகுப்பது தற்போதைய யுகத்தின் தேவையாகும். இதனை கருத்திற்கொண்டே ஜனாதிபதி ரணிலின் தலைமையிலான சமகால அரசாங்கம் செயல்பட்டு வருகிறது.

இலங்கை சுதந்திரம் அடைந்ததாக கூறப்படும் 1948, பெப்ரவரி 04 ஆம் திகதி சரியாக பத்து மாதம் கடந்து முதலாவதாக மலையக்தமிழர்களை வெளியேற்றுவதற்கான நடவடிக்கையாக 1948, டிசம்பர் 10 இல் பிரஜா உரிமைச்சட்டம் கொண்டு வரப்பட்டு மலையக மக்கள் வெளியேற்றப்பட்டனர்.

அதன்பின்னர் தமிழினத்துக்கு எதிரான இனப்படுகொலைகள் தொடர்ந்து சென்றதுடன் உரிமை மறுக்கப்பட்ட இடமாக 76, வருடங்களாக தமிழினம் இலங்கையில் வாழ்ந்து வருவதை காணலாம்.

சுதந்திர இலங்கையில் 75 வருட காலமாக தமிழர்கள் எதிர்நோக்கிவரும் பிரச்னைகளுக்கு தீர்வை பெற்றுக்கொடுக்கும் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவின் கடந்த 2023, பெப்ரவரி 4 இல் காலக்கெடு வழங்கினார் அது கானல் நீரானது இந்த 2024, பிப்ரவரி 4 இல் 76 ஆவது சுதந்திர தினமும் தமிழர்களுக்கு கறுப்பு நாளாகவே உள்ளது.

சர்வகட்சி மாநாடு

நாட்டின் 75 ஆவது சுதந்திர தினத்திற்கு முன்பாக தமிழர் பிரச்சினைக்கு தீர்வை பெற்றுக்கொடுப்பதாக ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க, நாடாளுமன்றத்தில் கடந்த ஆண்டு 2024, நவம்பர் மாதம் 23 ஆம் திகதி உறுதி வழங்கியிருந்தார்.   

தமிழ் கட்சிகளின் பிரதிநிதிகளிடம் அவர் இந்த உறுதிமொழியை அன்றைய தினம் வழங்கியிருந்தார்.

2023 ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத்திட்ட உரையில் ஜனாதிபதி இவ்வாறு உறுதி வழங்கிய நிலையில், வரவு செலவுத்திட்டம் நிறைவேற்றப்பட்டதன் பின்னர் அதற்கான பேச்சுவார்த்தைகளை ஆரம்பிப்பதாகவும் குறிப்பிட்டார்.

இலங்கைக்கு சுதந்திரம் கிடைத்தநாள்! தமிழினத்திக்கு கைவிலங்கு இடப்பட்டநாள்! | Independence Day For Sri Lanka

இவ்வாறான நிலையில், வரவு செலவுத்திட்டம் நிறைவேற்றப்பட்டதன் பின்னர், ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க சர்வகட்சி மாநாட்டிற்கு அழைப்பு விடுத்தார்.

தமிழர் பிரச்னைக்கு தீர்வை பெற்றுக்கொடுக்கும் வகையில், இந்த சர்வகட்சி மாநாட்டிற்கு அழைப்பு விடுக்கப்பட்டது. பல்வேறு சுற்றுப் பேச்சுவார்த்தைகள் நடத்தப்பட்ட போதிலும், 13 ஆவது திருத்தத்தை நடைமுறைப்படுத்துவதற்கு பல்வேறு தரப்பினர் தமது எதிர்ப்புகளை பதிவு செய்து வருகின்றனர்.

இந்த நிலையில், தமிழர் பிரச்னைகளுக்கு தீர்வைப் பெற்றுக்கொடுக்கும் வகையிலான இறுதி சர்வகட்சி மாநாடு, ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தலைமையில் கடந்த மாதம் 26 ஆம் திகதி நடைபெற்றது. இந்த மாநாட்டில் கலந்துகொண்ட பலர், ஜனாதிபதியின் தீர்மானத்திற்கு எதிராகவே இருந்தனர்.

13 ஆவது திருத்தம்

நாடாளுமன்றத்தை பிரதிநிதித்துவப்படுத்தும் கட்சிகளின் தலைவர்களுக்கு அழைப்பு விடுக்கப்பட்ட போதிலும், பல கட்சிகளின் தலைவர்கள் மாநாட்டை புறக்கணித்திருந்தனர்.

பிரதான எதிர்கட்சியான ஐக்கிய மக்கள் சக்தி, தேசிய மக்கள் சக்தி, தமிழ் முற்போக்கு கூட்டணி, தமிழ்த் தேசியக் கூட்டமைப்பில் அங்கம் வகித்த ரெலோ, புளோட் உள்ளிட்ட கட்சிகள் மாநாட்டை புறக்கணித்தனர்.

முன்னாள் ஜனாதிபதி தலைமையிலான மஹிந்த ராஜபக்ஸவின் கட்சியான ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன இந்த மாநாட்டில் கலந்துகொண்ட போதிலும், கட்சி சார்பில் பங்குப்பற்றியவர்கள் 13 ஆவது திருத்தத்தை நடைமுறைப்படுத்த தமது எதிர்ப்புகளை முன்வைத்தனர்.

மஹிந்த ராஜபக்ஸ ஜனாதிபதியாக இருந்த சந்தர்ப்பத்தில், 13 ஆவது திருத்தத்திற்கு அப்பாற் சென்று, 13 பிளஸ் அதிகாரங்களை வழங்குவதாக உறுதி வழங்கிய போதிலும், அவர் பிரதிநிதித்துவப்படுத்தும் கட்சி உறுப்பினர்கள், 13 ஆவது திருத்தத்தை நடைமுறைப்படுத்துவதற்கு எதிர்ப்பு தெரிவிக்கின்றனர்.

நாட்டை பிளவுப்படுத்தும் 13 ஆவது திருத்தத்தை நடைமுறைப்படுத்தக்கூடாது என்ற நிலைப்பாட்டில்தான் பிரதான மொட்டுக்கட்சியில் உள்ளவர்களின் பலரின் நிலைப்பாடாகும்.

சிங்களத்தலைமைகள்

யார் ஜனாதிபதியாக பதவி வகித்தாலும் வடக்கு கிழக்கு தமிழர்களுக்கான நிரந்நர அரசியல் தீர்வை வழங்க முடியாத நிறைவேற்று ஜனாதிபதிகளாகவே தமது பதவிகளை தக்கவைத்து காலத்தை கடத்திய வரலாறுகளே தொடர்கின்றன.

இன்று 2024 பெப்ரவரி 04 இல் இலங்கையின் 76 ஆவது சுதந்திர தினம் என்று பெருமை கூறும் சிங்களத்தலைமைகள் 76, வருடங்களாக சுதந்திரம் இல்லாமல் இலங்கையில் வாழும் தமிழ் மக்களை பற்றி சிந்திப்பதாக இல்லை. சிங்க கொடியை கட்டுவதால் மட்டும் சுதந்திரம் இந்த நாட்டில் வாழும் சகல மக்களுக்கும் கிடைத்து விட்டது என நினைப்பது தவறாகும்.

இலங்கை சுதந்திரம் அடைந்தாலும் இலங்கயில் வாழும் தமிழ் பேசும் மக்களுக்கு இன்றுமே சுதந்திரம் கிடைக்கவில்லை அந்த சுதந்திரம் வேண்டியே தந்தை செல்வா 1949, தொடக்கம் 1976, வரை அகிம்சை ரீதியி்லான போராட்டங்களையும். 1976 தொடக்கம் 2009 வரை தலைவர் பிரபாகரன் ஆயுத ரீதியிலான போராட்டத்தையும் 2009 தொடக்கம் இன்றுவரை இராஜதந்திர ரீதியிலான பணிகளையும் தமிழ்த்தலைவர்கள் முன்னெடுக்கின்றனர்.

சுதந்திர நாள் 

ஒரு நாட்டில் இன்னுமொரு இனம் அடிமை விலங்கிடப்பட்ட நிலையில் சுதந்திரத்திற்காக போராடும் போது அதற்கான நிரந்தர தீர்வை வழங்காமால் தேசிய கீதம் தமிழால் பாடுவதால் மட்டும் சுதந்திரம் கிடைத்து விட்டது எனக் கருத முடியாது.

இலங்கைக்கு சுதந்திரம் கிடைத்தநாள்! தமிழினத்திக்கு கைவிலங்கு இடப்பட்டநாள்! | Independence Day For Sri Lanka

“சுதந்திரம்” என்பதை விட தமிழர்களுக்கு அது ஆங்கிலேயர்களும், சிங்களவர்களும் சேர்ந்து செய்த “தந்திரம்” மட்டுமே. சுதந்திர நாள் என்பது தமிழர்களுக்கு ஒரு கரி நாள். சட்டபூர்வமாக உரிமை பறிபோன நாள். அவ்வப்போது சற்று தணிந்தும், கொதித்தும் வந்த போதும் பண்பளவில் எந்த மாற்றமும் நிகழ்ந்ததில்லை.

யுத்தத்திற்குப் பின்னர் தமிழ் மக்கள் தரப்பிலும் சுதந்திர தினத்தில் தம்மையும் இணைத்து அனுஷ்டிக்கும் போக்கு ஆங்காங்கு காண முடிகிற போதும். உணர்வுபூர்வமான பங்களிப்பாக அது இல்லை என்பதே நிதர்சனம்.

அகதிகளாகவும், அனாதரவாகவும், குடும்பங்கள், சொத்துக்கள் இழந்தவர்களாகவும், அரசியல் உரிமைகளையும் அடிப்படை உரிமைகளை பறிகொடுத்தவர்களாகவும் இருக்கும் ஒரு சமூகத்துக்கு சுதந்திரம் ஒரு கேடா என்கிற நிலை. சமத்துவமும், சக வாழ்வும், சமவுரிமையும் சகல மக்களுக்கும் கிடைக்கக் கூடிய நாளே இலங்கைக்கு உண்மையான சுதந்திர நாள்.

சிறுபான்மை மக்கள்

வனம், வனவிலங்கு பாதுகாப்பிற்கென வகுக்கப்பட்டுள்ள புதிய புதிய எல்லை நிர்ணயங்களும், தொல் பொருள் புனித பூமிக்கெனவும், பாதுகாப்புக்கான முகாம்கள் அமைப்பதற்கும், மேய்ச்சல் தரைகளான மயிலத்தமடு மாதவனை காணிகளை கபளீகரம் செய்து கொண்டும் மாடுகளை தினமும் சுட்டும் வெட்டியும் கொலைசெய்து கொண்டு கூட்டுத்தாபனங்களின் பெயர்களிலும் திட்டமிட்டு எல்லைப்படுத்தப்பட்டுள்ளதுடன், இக்காரணங்களால் சிறுபான்மை மக்களின் பாரம்பரிய விவசாய நிலங்களுக்குள் செல்லத் தடை விதிக்கப்பட்டுள்ளது.

இலங்கைக்கு சுதந்திரம் கிடைத்தநாள்! தமிழினத்திக்கு கைவிலங்கு இடப்பட்டநாள்! | Independence Day For Sri Lanka

“தேசிய நல்லிணக்கத்தை ஏற்படுத்தும் அதிகாரம் தனக்கு உள்ளது” என கூறும் ஜனாதிபதி ரணில் 76 ஆவது சுதந்திர தினவுரையில் இன்று எதனை கூறப்போகிறார்? வெறுமனே நீதி, நியாயம், இனங்களின் ஐக்கியம், நல்லிணக்கம் மற்றும் தேசிய ஒருமைப்பாடு என்பன பெருமைக்காகக் கூறிச்செல்லும் கூக்குரலிடும் வாய்வார்த்தைகளாகிவிடக்கூடாது என்பதுடன் இவையனைத்தும் நடைமுறையில் நிலை நாட்டப்பட வேண்டிய கடப்பாட்டையே சுட்டிக்காட்டுகின்றது.

சமாதானத்தின் பெயரால் புறாக்களை விடுவிப்போர் சந்தர்ப்பம் வரும்போது இனவாதத்தின் தீப்பிழம்புகளாய் மாறி நிற்கின்றனர். இன்று 76 ஆவது இலங்கையின் சுதந்திரம் என கூறி பல நிகழ்வுகளை நடத்தினாலும் 76 வருடங்களாக இன்னுமொரு இனம் அடிமைகளாக அடக்கு முறையுடன் வாழ்ந்து வருகிறார்கள் என்பதை இன்றைய சுதந்திர நாளிலும் தெளிவாக சர்வதேசம் புரிந்து கொள்வது அவசியம்.

பொறுப்பு துறப்பு!

இக்கட்டுரையானது பொது எழுத்தாளர் Ariyam அவரால் எழுதப்பட்டு, 04 February, 2024 அன்று தமிழ்வின் இணையத்தளத்தில் வெளியிடப்பட்டது. இக்கட்டுரைக்கும் தமிழ்வின் தளத்திற்கும் எந்தத் தொடர்பும் இல்லை.

1ம் ஆண்டு நினைவஞ்சலி

வதிரி, மல்லாகம்

21 Aug, 2024
மரண அறிவித்தல்

கந்தர்மடம், Scarborough, Canada

04 Sep, 2025
2ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ். கரவெட்டி, கோப்பாய், Markham, Canada

01 Sep, 2023
2ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், சென்னை, India, Toronto, Canada

09 Sep, 2023
மரண அறிவித்தல்

கொழும்பு, Warwick, England, United Kingdom

03 Sep, 2025
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்
12ம் ஆண்டு நினைவஞ்சலி

வண்ணார்பண்ணை, சென்னை, India

08 Sep, 2013
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

புங்குடுதீவு 1ம் வட்டாரம், புங்குடுதீவு, India, Lausanne, Switzerland

09 Aug, 2025
4ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 6ம் வட்டாரம், Toronto, Canada, வவுனியா, கொட்டாஞ்சேனை

09 Sep, 2021
1ம் ஆண்டு நினைவஞ்சலி

அல்வாய் தெற்கு, St. Gallen, Switzerland

21 Aug, 2024
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

புங்குடுதீவு 10ம் வட்டாரம், கொள்ளுப்பிட்டி

09 Aug, 2025
மரண அறிவித்தல்

காரைநகர் வலந்தலை, Gants Hill, United Kingdom

04 Sep, 2025
5ம் ஆண்டு நினைவஞ்சலி

ஆனையிறவு இயக்கச்சி

07 Sep, 2020
5ம் ஆண்டு நினைவஞ்சலி

வல்வெட்டித்துறை தீருவில், Mississauga, Canada

03 Sep, 2020
2ம் ஆண்டு நினைவஞ்சலி

நாரந்தனை, ஈச்சமோட்டை, கொட்டாஞ்சேனை

09 Sep, 2023
9ம் ஆண்டு நினைவஞ்சலி

நாரந்தனை, பிரான்ஸ், France

08 Sep, 2016
4ம் ஆண்டு நினைவஞ்சலி
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 5ம் வட்டாரம், Bad Bergzabern, Germany

06 Sep, 2024
30ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம்

08 Sep, 1995
5ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 1ம் வட்டாரம், கொழும்பு 13

04 Sep, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

கோப்பாய், நீர்வேலி, Scarborough, Canada

20 Aug, 2024
3ம் ஆண்டு நினைவஞ்சலி

நல்லூர், கொழும்பு, திருச்சி, India

06 Sep, 2022
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 10ம் வட்டாரம், புங்குடுதீவு 3ம் வட்டாரம், Ajax, Canada

03 Sep, 2025
2ம் ஆண்டு நினைவஞ்சலி

கொக்குவில் மேற்கு, கொக்குவில், Toronto, Canada

05 Sep, 2023
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US