யாழ்ப்பாணத்தில் இடம்பெறவுள்ள தேசிய சுதந்திர தின நிகழ்வு : யாழ்.அரசாங்க அதிபர் தகவல்
யாழில் இடம்பெறவுள்ள தேசிய சுதந்திர தின நிகழ்வு தொடர்பான முன்னேற்பாட்டு கூட்டத்தில் பல்வேறு தீர்மானங்கள் எட்டப்பட்டதாக யாழ்.மாவட்ட அரசாங்க அதிபர் சிவபாலசுந்தரன் தெரிவித்துள்ளார்.
தேசிய சுதந்திர நிகழ்வு தொடர்பான முன்னாயத்த கூட்டம் இன்று (03.02.2023) யாழ். மாவட்ட செயலகத்தில் இடம்பெற்றுள்ளது.
இலங்கையின் 75 ஆவது சுதந்திர சுதந்திர தினத்தை நினைவு கூரும் முகமாக வருகின்ற
11ம் திகதி தேசிய சுதந்திர தின விழா வைபவங்கள் யாழ்ப்பாணத்தில் நடாத்துவதற்கு
ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
நிகழ்வுக்கான ஏற்பாடுகள்
ஜனாதிபதி செயலகத்தின் வட பிராந்திய அபிவிருத்திக்கு பொறுப்பான மேலதிக செயலாளர் இளங்கோவனின் பொறுப்பிலே யாழ்ப்பாண நிகழ்வுக்கான ஏற்பாடுகள் செய்யப்படுள்ளன.
இக்கூட்டத்தில் இராணுவத்தின் உயர் அதிகாரிகள், பொலிஸ் உயரதிகாரிகள், மாகாண பிரதமர் செயலாளர், வடக்கு மாகாண ஆளுநர் வடமாகாணத்துக்குட்பட்ட அரசாங்க அதிபர்கள் சூப் செயலி மூலம் இணைந்து கொண்டுள்ளனர்.
நிகழ்வு தொடர்பான பல்வேறு பட்ட தீர்மானங்கள் எடுக்கப்பட்டன. இந்த நிகழ்விலே மூன்று முக்கிய அம்சங்கள் இடம்பெறவுள்ளன.
மூன்று முக்கிய அம்சங்கள்
இந்தியாவால் தரப்பட்டுள்ள யாழ். கலாச்சார மண்டபத்தினை முறையாக கையளித்து அதனை செயற்படுத்தும் முகமாக காலை நிகழ்விலே அதற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டிருக்கின்றன.
அதைத் தொடர்ந்து மாலை நிகழ்வாக ஐந்து மாவட்டங்களும் தங்களுடைய மாவட்டத்தினுடைய தனித்துவமான பிரசித்தி பெற்ற கலை அம்சங்களை உள்ளடங்கிய வாகன பேரணி ஒன்று இந்திய கலாச்சார மத்தியத்தில் இருந்து ஆரம்பமாகி யாழ். நகர் வரை சென்று நிறைவு பெறுவதற்குரியவாறு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
அதன் பின்னர் மாலையில் கலாச்சார இசை நிகழ்வு ஒன்றும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. கலாச்சார இசை நிகழ்ச்சியில் பொதுமக்கள் கலந்துக்கொள்ள முடியும்.
மேலும் யாழ்.மாவட்ட அரச அதிபர் வடக்கு ஆளுநர், வட மாகாண பிரதம
செயலாளரின் பங்குபற்றுதலில் நிகழ்வினை திறம்பட நடாத்துவதற்கு மாகாண
மட்டத்திலும், மாவட்ட மட்டத்திலும் ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.

தமிழ் படிக்க ஆசிரியர் இல்லையே என்ற கவலை இனியும் வேண்டாம். uchchi.com இன் இணையவழிக் கற்கை நெறிகளில் இன்றே இணையுங்கள்.