அதிரடி காட்டிய அபிஷேக் சர்மா! நியூசிலாந்து அணிக்கெதிரான டி20 தொடரை கைப்பற்றிய இந்தியா
நியூசிலாந்து அணிக்கெதிரான மூன்றாவது டி20 போட்டியையும் வென்று தொடரை இந்திய அணி கைப்பற்றியுள்ளது.
இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள நியூசிலாந்து கிரிக்கெட் அணி 3 ஒருநாள் , 5 டி20 போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடி வருகின்றது.
நியூசிலாந்து அணி
முதலில் நடைபெற்ற ஒருநாள் தொடரை 2-1 என்ற கணக்கில் நியூசிலாந்து கைப்பற்றியது.
இதையடுத்து நடைபெற்ற முதல் 2 டி20 போட்டிகளில் இந்தியா வென்று 2-0 என முன்னிலை பெற்றிருந்தது. இந்தநிலையில், இந்தியா-நியூசிலாந்து இடையிலான 3வது டி20 போட்டி இன்று(25) கவுகாத்தியில் நடைபெற்றது.

போட்டியில் நாணயசுழற்சியில் வென்ற இந்தியா பந்துவீச்சை தேர்வு செய்தது. அதன்படி முதலில் களமிறங்கிய நியூசிலாந்து அணி 20 ஓவர்கள் முடிவில் 8 விக்கெட் இழப்பிற்கு 153 ஓட்டங்களை குவித்தது.
அதிகபட்சமாக பிலிப்ஸ் 48 ஓட்டங்கள் அடித்தார். இந்திய அணி தரப்பில் பும்ரா 3 விக்கெட்டுகளை வீழ்த்தினார்.
இந்திய அணி
இதையடுத்து களமிறங்கிய இந்திய அணி அதிரடியாக விளையாடி 10 ஓவர்களில் 2 விக்கெட் இழப்பிற்கு 155 ஓட்டங்களை பெற்றது. இந்திய அணி வீரர் அபிஷேக் சர்மா 14 பந்துகளில் அரைசதம் அடித்தார்.

இதன்மூலம் யுவராஜ் சிங்கிற்கு அடுத்த படியாக அதிவேகமாக அரைசதம் அடித்த இந்தியர் என்ற சாதனையை அவர் படைத்தார். மறுமுனையில் அதிரடியாக விளையாடிய சூரியகுமார் யாதவ் அரைசதம் அடித்தார்.

இதனை தொடரந்து டி20 தொடரை 3 -0 என்ற கணக்கில் கைப்பற்றியுள்ளது.