வாகனங்களின் விலை உயர்வு பின்னணியில் மாஃபியா கும்பல்!
இறக்குமதி செய்யப்படும் வாகனங்களின் விலைகள் தன்னிச்சையாக உயர்த்தப்படுவதற்கு பின்னால் மாஃபியா கும்பல் செயற்படுவதாக பரவும் கருத்தை மறுக்க முடியாது என்று வயம்ப பல்கலைக்கழகப் பேராசிரியர் அமிந்த மெத்சிலா பெரேரா தெரிவித்துள்ளார்.
இறக்குமதி செய்யப்படும் வாகனங்கள் மீது விதிக்கப்பட்டுள்ள 50% சுங்கக்கூடுதல் வரியால் வாகனங்களின் விலைகள் மீண்டும் உயரக்கூடும் என்ற தகவல் தொடர்பில் கருத்து தெரிவிக்கும்போதே பேராசிரியர் இவ்வாறு கூறியுள்ளார்.
வாகன இறக்குமதி
இந்த 50% சுங்கக்கூடுதல் வரியால், வாகனங்களின் விலைகள் ஐந்து இலட்சம் முதல் ஐந்து இலட்சம் ரூபாய் வரை உயரக்கூடும் என்று வாகன இறக்குமதியாளர்கள் கூறுகின்றனர்.

பொருளாதார நெருக்கடியின் காரணமாக நாட்டிற்குள் வாகன இறக்குமதி நிறுத்தப்பட்டிருந்த போதிலும், கடந்த ஆண்டு மீண்டும் வாகனங்களை இறக்குமதி செய்ய அனுமதி வழங்கப்பட்டது.
இருப்பினும், மே 15 ஆம் திகதி முதல் மூன்று மாதங்களுக்கு வாகன இறக்குமதி மீது 50% சுங்கக் கூடுதல் வரி விதிக்கப்பட்ட நிலையில், வரியை டிசம்பர் 31 ஆம் திகதி வரை நீட்டிக்க முடிவு செய்யப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
இலங்கையில் முதன்முறையாக பதிவாகியுள்ள சம்பவம்! பிரபல தனியார் வங்கிகளின் முகாமையாளர்கள் அதிரடியாக கைது