அதிகரிக்கும் திருட்டு சம்பவங்கள்: பொலிஸாரின் கைது நடவடிக்கைகள்
நாடளாவிய ரீதியில் பல்வேறு திருட்டு சம்பவங்கள் அதிகரித்து வருகின்றது.
இந்நிலையில் பொலிஸாரும் விரைந்து சந்தேக நபர்களை கைது செய்யும் நடவடிக்கையினையும் முன்னெடுத்து வருகின்றனர்.
முல்லைத்தீவு
முல்லைத்தீவு புதுக்குடியிருப்ப மூங்கிலாற்றுப் பகுதியில் சட்டத்திற்கு முரணாக பெட்ரோல் பதுக்கிவைத்த நபர் ஒருவரை பொலிஸார் கைது செய்துள்ளார்கள்.
இச் சம்பவம் இன்று இடம்பெற்றுள்ளது.
மூங்கிலாற்று பகுதியில் வீட்டில் பெட்ரோல் பதுக்கி வைத்திருப்பதாக சம்பவம் தொடர்பில் பொலிஸாருக்கு கிடைக்கப்பெற்ற தகவலுக்கமைய பொலிஸார் சென்று சோதனை செய்தபோது பதுக்கிவைக்கப்பட்ட பெட்ரோலுடன் ஒருவர் கைதுசெய்யப்பட்டுள்ளார்.
சட்டத்திற்கு முரணாக வீட்டில் 49 லிட்டர் பெட்ரோலினை பதுக்கி வைத்துள்ளார் என தெரிவிக்கப்படுகின்றது.
கைதுசெய்யப்பட்ட சந்தேக நபரும் மீட்கப்பட்ட பெட்ரோலும் புதுக்குடியிருப்பு பொலிஸ் நிலையத்தில் பாராப்படுத்தப்பட்டுள்ளதுடன் புதுக்குடியிருப்பு பொலிஸார் சட்ட நடவடிக்கைக்கு உட்படுத்தும் நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
யாழ்ப்பாணம்
யாழ். தெல்லிப்பழை கட்டுவன் பகுதியில் திருடப்பட்ட ஐந்து லட்சம் ரூபாய் மதிக்கத்தக்க நீர் இறைக்கும் இயந்திரங்களை தெல்லிப்பழை பொலிஸார் மீட்டுள்ளனர்.
இச் சம்பவத்துடன் தொடர்புடைய 04 சந்தேக நபர்களையும் பொலிஸார் கைது செய்துள்ளனர். இதன்போது திருடப்பட்ட 07 நீர் இறைக்கும் மோட்டார்கள் மற்றும் இரண்டு நீர் பம்பிகள் பொலிஸாரால் கைப்பற்றப்பட்டுள்ளது.
கட்டுவன் பகுதியில் நீர் இறைப்பதற்காக பயன்படுத்தப்பட்ட இயந்திரங்களை இவ்வாறு திருடப்பட்டடிருந்தமை குறிப்பிடத்தக்கது.
கிளிநொச்சி
கிளிநொச்சி இராமநாதபுரம் பகுதியில் எரிபொருள் பெறுவதற்காக பரநதன் நகரப்பகுதியில் அமைந்துள்ள தனியார் எரிபொருள் நிரப்பு நிலையத்தில் வரிசையில் காலை தரித்து வைக்கப்பட்டிருந்த உழவு இயந்திரம் ஒன்று திருடப்பட்டுள்ளது.
எரிபொருள் பெறுவதற்காக நேற்று காலை தரித்து வைக்கப்பட்டிருந்த உழவு இயந்திரம் இரவு 8.30 மணியளவில் களவாடப்பட்டுள்ளது.
உழவு இயந்திர உரிமையாளர் கிளிநொச்சி பொலிஸ்
நிலையத்தில் முறைப்பாடு ஒன்றை பதிவு செய்துள்ளார் இது தொடர்பாக கிளிநொச்சிப்
பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.