தமிழ் பொதுவேட்பாளருக்காக காணாமல் ஆக்கப்பட்ட சங்கத்தின் தலைவிகள் கோரிக்கை
எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில் தமிழர்கள் அனைவரும் உணர்வுடன் தமிழ் பொது வேட்பாளரை தெரிவு செய்ய வேண்டும் என காணாமல் ஆக்கப்பட்ட சங்கத்தின் தலைவிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
யாழ்ப்பாணத்தில் இன்று (16.09.2024) இடம்பெற்ற ஊடக சந்திப்பிலேயே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டுள்ளார்.
மேலும் அவர்கள் கூறுகையில்,
“15 வருடங்களை தாண்டியும் எமது இனத்திற்கு எந்த விதத் தீர்வும் கிடைக்காத நிலையில், ஜனாதிபதித் தேர்தலை வாய்ப்பாக பயன்படுத்தி எமது சங்குச் சின்னத்திற்கு வாக்களித்து வெற்றி பெற செய்ய வேண்டும்.
தமிழராகிய நாம் பல பேரை இழந்திருக்கிறோம். பலர் காணாமல் ஆக்கப்பட்டிருக்கிறார்கள். எனவே, இவர்களுக்கான நீதி கோரி நாம் கடந்த 15 வருடமாக போராடி வருகிறோம்.
அரசாங்கத்திற்கு செய்தியை தெளிவாக சொல்வதற்கு அனைவரும் தமிழ் மக்கள் பேசும் மக்கள் சங்குச் சின்னத்திற்கு வாக்களித்து பிரச்சினைகளுக்கு தீர்வு கிடைக்க வேண்டும்” என கேட்டுக் கொண்டனர்.
மேலும் தெரிவிக்கையில்,
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |