இலங்கையில் அதிகரித்துள்ள அபாய நிலை! மக்களுக்கு விடுக்கப்பட்டுள்ள கடுமையான எச்சரிக்கை
நாட்டில் இதயநோயாளிகளின் எண்ணிக்கை அதிகரிக்கும் அபாயம் காணப்படுவதாக கொழும்பு தேசிய வைத்தியசாலையின் இதய நோய் தொடர்பான நிபுணர் வைத்தியர் அனிது பத்திரன தெரிவித்துள்ளார்.
முகக்கவசங்களை அணிந்து கொள்ளுங்கள்
நாட்டில் அதிகரித்து வரும் காற்று மாசுபாடு இதய நோயாளிகளின் எண்ணிக்கையை அதிகரிக்க வழிவகுத்துள்ளது எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

எனவே இந்த நிலைமை குறித்து மக்கள் அவதானத்துடன் செயற்பட வேண்டும் என வைத்தியர் மேலும் வலியுறுத்தினார்.
இதேவேளை, மக்கள் வெளியில் செல்லும்போது கூடுமானவரை முகக்கவசங்களை அணிந்து கொள்வது சிறந்தது. காற்று மாசுபாடு இதய நோயால் பாதிக்கப்பட்ட நோயாளிகளை மாத்திரமல்ல, உயர் இரத்த அழுத்தம், கொழுப்பு, நீரிழிவு, புற்றுநோய் மற்றும் நீண்டகால நுரையீரல் நோய்கள் போன்ற தொற்றாத நோய்களையும் அதிகரிக்கிறது என வைத்தியர் தொடர்ந்தும் சுட்டிக்காட்டியுள்ளார்.
| நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP இல் இணையுங்கள் JOIN NOW |
தமிழ்நாடு சட்டப்பேரவைத் தேர்தல் முடிவுகள் 2026
தவெக பல தொகுதிகளில் முன்னிலை வகித்தாலும்..! 10 தொகுதிகளின் நிலவரம் - இறுதி முடிவுகளில் மாற்றங்கள் ஏற்படும் வாய்ப்பு
அதிரவைக்கும் வாக்கு எண்ணிக்கை..! முன்னிலை வகிக்கும் தவெக - வேட்பாளர்களை பாதுகாக்க விஜய் அவசர ஏற்பாடுகள்