கிராம பகுதிகளில் அதிகரித்து வரும் ஜேவிபியின் செல்வாக்கு!
கிராம மட்டங்களில் மக்கள் விடுதலை முன்னணியின் (JVP) செல்வாக்கு முன்னர் இருந்ததை விட அதிகரித்து வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
இந்நிலையில், மக்கள் விடுதலை முன்னணியின் கொள்கை தொடர்பில் நகர மக்கள் மத்தியிலும் கருத்தாடல்கள் இடம்பெறுகின்றன.
எனினும் தேர்தல் ஒன்றின் போது மக்கள் விடுதலை முன்னணிக்கு வாக்களிக்கும் அளவில் இன்னமும் நகர மக்கள் மத்தியில் மாற்றங்கள் ஏற்படவில்லை எனவும் தெரிவிக்கப்படுகின்றது.
இந்நிலையில், அரசாங்கம் மற்றும் ஏனைய எதிர்க்கட்சிகளின் செயற்பாடுகளில் பொது மக்கள் அதிருப்தி காணும் நிலையில் நகர மக்கள் மத்தியிலும், மக்கள் விடுதலை முன்னணிக்கு வாக்களிக்க வேண்டும் என்ற மனமாற்றம் ஏற்படலாம் என எதிர்ப்பாரக்கப்படுகின்றது.
இதற்காக நகர மட்டத்டதில் கருத்தாடல்களை தீவிரப்படுத்த வேண்டிய நிலையில் மக்கள் விடுதலை முன்னணி உள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.