இலங்கையில் நாளாந்தம் அதிகரித்து வரும் கோவிட் இறப்பு விகிதம்
கோவிட் தொற்றுக்கு பலியாவோரின் எண்ணிக்கை அதிகரித்து வரும் நிலையில், இலங்கையில் இறப்பு விகிதம் 1.5% ஆக அதிகரித்துள்ளது.
ஏற்கனவே 1.3% ஆக இருந்த இறப்பு விகிதம் தற்போது 1.5% ஆக அதிகரித்துள்ளதாக அரச தகவல் திணைக்களம் தெரிவித்துள்ளது.
இலங்கையில் நேற்று (ஆகஸ்ட் 7) அதிகபட்சமாக ஒரு நாள் கோவிட் இறப்புகள் பதிவாகின. அது 98 ஆக இருந்தது. அதனையடுத்து இலங்கைக்குள் கோவிட் மொத்த இறப்பு எண்ணிக்கை 4,919 ஆக உயர்ந்துள்ளது.
சுகாதார அமைச்சின் கூற்றுப்படி, இறப்புகளில் பெரும்பாலானவை 60 அகவைக்கும் மேற்பட்டவர்களாவர். சுமார் 75% இறப்புகள் 60 வயதுக்கு மேற்பட்டவர்கள், 23.81 விகிதமானோர் 30 முதல் 59 அகவைக்குட்பட்டவர்கள்.
மேலும், 1.22% இறப்புகள் 30 அகவைக்குட்பட்டவர்களாவர். வைரஸால் இறப்பவர்களில் 90% பேர் தடுப்பூசி செலுத்திக்கொள்ளாதவர்கள் என்று சுகாதார அதிகாரிகள் கருதுகின்றனர்.
பாலின வாரியாக இறப்புகளை பகுப்பாய்வு செய்யும் போது, மொத்தம் 2,853 ஆண்கள் வைரஸால் இறந்துள்ளனர், நேற்றைய நிலவரப்படி 2,066 பெண்கள் கொரோனா வைரஸால் உயிரிழந்துள்ளனர்.