மட்டக்களப்பில் அதிகரித்து வரும் கோவிட் தொற்றாளர்கள்!சுகாதார பிரிவினர் எச்சரிக்கை
மட்டக்களப்பு மாநகரசபைக்குட்பட்ட பகுதிகளில் தொடர்ச்சியாக கோவிட் தொற்றாளர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருவதாக சுகாதார பிரிவினரால் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
மாமாங்கம் பகுதியில் மேற்கொள்ளப்பட்ட பீ.சி.ஆர் பரிசோதனையில் 11கோவிட் தொற்றாளர்கள் அதிகூடிய செறிவு நிலையில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாகவும் , இது மிகவும் ஆபத்தான நிலையெனவும் சுகாதார துறையினர் தெரிவித்துள்ளனர்.
இந்த நிலையானது கூடுதலான தொற்று ஏற்படுவதற்கான வாய்ப்புகளை ஏற்படுத்தியிருக்கலாம் எனவும் பொதுச்சுகாதார பிரிவினர் தெரிவித்துள்ளனர்.
இதேநேரம் இன்றைய தினம் மட்டக்களப்பு மாநகரசபைக்குட்பட்ட பகுதிகளில் அதிகளவான தொற்றாளர்களாக 34 பேர் இனங்காணப்பட்டுள்ளதாகவும் ,மட்டக்களப்பு சுகாதார வைத்திய அதிகாரி தெரிவித்துள்ளார்.
இதேநேரம் மட்டக்களப்பு மாவட்டத்தில் கடந்த 24 மணி நேரத்தில் 135 பேர் கோவிட் தொற்றாளர்களாக இனங்காணப்பட்டுள்ளதுடன், ஒருவர் மரணமடைந்துள்ளதாக மட்டக்களப்பு பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் டாக்டர் நா.மயூரன் தெரிவித்துள்ளார்.
அதிகளவில் மட்டக்களப்பில் 34 பேரும், காத்தான்குடியில் 20 பேரும், ஓட்டமாவடியில் 25 பேரும், கோறளைப்பற்று மத்தியில் 21 பேரும் ,செங்கலடியில் 12 பேரும், ஏறாவூரில் 11 பேரும் என பல்வேறு பகுதிகளிலும் 135 கோவிட் தொற்றாளர்கள் இனங்காணப்பட்டுள்ளதுடன் காத்தான்குடியில் ஒருவர் மரணமடைந்துள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

பதினாறாவது மே பதினெட்டு 1 நாள் முன்

15 வருட நட்பு, காதல் வந்தது இப்படித்தான்.. மேடையில் விஷால் - தன்ஷிகா ஜோடியாக திருமண அறிவிப்பு Cineulagam

வங்கதேசத்தில் பிரபல நடிகை கொலை வழக்கில் கைது: விமான நிலையத்தில் மடக்கி பிடித்த பொலிஸார் News Lankasri

வெளிநாட்டு மாணவர்களுக்கு உணவு கிடையாது: உணவு வங்கிகளின் முடிவால் தவிக்கும் சர்வதேச மாணவர்கள் News Lankasri
