மன்னாரில் அதிகரிக்கும் கோவிட் தொற்று: பதிவாகிய மரணங்களின் எண்ணிக்கை
கடந்த 10 நாட்களில் 144 கோவிட் தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளதோடு, புதிதாக 2 மரணங்களும் நிகழ்ந்துள்ளதாக மன்னார் மாவட்ட பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் வைத்தியர் ரி.வினோதன் தெரிவித்துள்ளார்.
மன்னார் மாவட்ட கோவிட் நிலவரம் தொடர்பாக இன்று (11) விடுத்துள்ள கோவிட் நிலவர அறிக்கையிலே இவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளது. இது தொடர்பில் அந்த அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது,
மன்னார் மாவட்டத்தில் கடந்த 10 நாட்களில் 144 கோவிட் தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ள நிலையில் , தற்போது வரை 3077 கோவிட் தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.
இந்த நிலையில், மன்னார் மாவட்டத்தில் இதுவரை கோவிட் தொற்றால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 31 ஆக அதிகரித்துள்ளதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது.
