கட்டுநாயக்கவில் அதிகரிக்கும் கோவிட் தொற்றாளர்கள்
கட்டுநாயக்க பிரதேசத்தில் இன்றைய தினம் 86 கோவிட் -19 தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளதாக கம்பஹா மாவட்ட சுகாதார சேவைகள் பணிப்பாளர் மருத்துவர் நளின் ஆரியரத்ன தெரிவித்துள்ளார்.
இவர்களில் 79 பேர் கட்டுநாயக்க சீதுவை சுகாதார வைத்திய அதிகாரி பிரிவை சேர்ந்தவர்கள்.
இவர்களுடன் இந்த சுகாதார வைத்திய அதிகாரி பிரிவில் இதுவரை 2 ஆயிரத்து 600 கோவிட் தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.
அத்துடன் கட்டுநாயக்க சுதந்திர வர்த்தக வலையத்தில் நேற்றை தினம் 7 கோவிட் தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்டனர்.
இவர்களுடன் சுதந்திர வர்த்தக வலையத்தில் உள்ள 64 தொழிற்சாலைகளில் 2 ஆயிரத்து 382 கோவிட் தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.
கட்டுநாயக்க சீதுவை பிரதேசத்தில் கோவிட் தொற்றாளர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருவதாகவும் நளின் ஆரியரத்ன குறிப்பிட்டுள்ளார்.
90 வயதை தொடவிருக்கும் நடிகர் வெண்ணிற ஆடை மூர்த்தி.. தள்ளாடும் வயதிலும் எப்படி ஆரோக்கியமாக இருக்கிறார் தெரியுமா? இதோ அந்த ரகசியம் Cineulagam
பிரித்தானியாவை விட்டு வெளியேற உத்தரவிடப்பட்டுள்ள இலங்கையர்: கர்ப்பிணி மனைவியின் அச்சம் News Lankasri