நாட்டில் அதிகரிக்கும் மற்றுமொரு ஆபத்து : மக்களுக்கு விடுக்கப்பட்டுள்ள எச்சரிக்கை
நாட்டில் டெங்கு நோயாளர்களின் எண்ணிக்கை அதிகரித்து வரும் நிலையில் இந்த வருடத்தில் இதுவரையான காலப்பகுதியில் 15,874டெங்கு நோயாளர்கள் பதிவாகியுள்ளதாகச் சுகாதார அமைச்சின் தொற்றுநோய் தடுப்பு பிரிவு தெரிவித்துள்ளது.
இதில் அதிகளவான டெங்கு நோயாளர்கள் மேல் மாகாணத்தில் பதிவாகியுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.
மேலும் நாட்டில் தற்போது பெய்து வரும் தொடர் மழையால் நீர் தேங்கி நிற்கும் இடங்களில் நுளம்பு பெருகும் வாய்ப்புக்கள் அதிகமாகக் காணப்படுகின்றமையால் அவதானமாக இருக்குமாறு தொற்றுநோய் தடுப்புப்பிரிவு பொதுமக்களுக்கு எச்சரிக்கை விடுத்துள்ளது.
அத்துடன் சுற்றுப்புறச் சூழலைத் தூய்மையாக வைத்திருக்குமாறும் பொதுமக்களிடம் கேட்டுக்கொண்டுள்ளது.
இந்நிலையில் கடந்த வருடமும் 31,162டெங்கு நோயாளர்கள் பதிவாகியிருந்தமை குறிப்பிடத்தக்கதாகும்.

பதினாறாவது மே பதினெட்டு 2 மணி நேரம் முன்

ஆபரேஷன் சிந்தூர்... தாக்குதலுக்கு முன்பே பாகிஸ்தானுக்கு தெரியும்: வெளிவிவகார அமைச்சர் கருத்தால் குழப்பம் News Lankasri
