வவுனியா மாவட்டத்தில் அதிகரித்துள்ள தொழுநோயாளர்கள்
வவுனியா மாவட்டத்தில் இதுவரை 123 தொழுநோயாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளதாக தொற்று நோயியல் வைத்திய அதிகாரி சுஜானி தெரிவித்துள்ளார்.
வவுனியா பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் பணிமனையில் இன்று (27.05.2024) தொழுநோய் தொடர்பாக இடம்பெற்ற விழிப்புணர்வு கருத்தரங்கின் போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.
மருத்துவ உதவிகள்
அவர் தாெடர்ந்தும் கருத்து தெரிவிக்கையில், வவுனியா மாவட்டத்தில் இதுவரை 123 தொழுநோயாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளனர். இதில் செட்டிகுளம் பிரதேசத்தில் அதகமாக 69 தொழு நோயாளர்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக தெரிவித்தார்.
இதன்போது தொழுநோய் தொற்றும் முறை மற்றும் அதன் அறிகுறிகள், அதற்கான மருத்துவ உதவிகள் போன்ற விடயங்களையும் கூறியுள்ளார்.
இக்கருத்தரங்கில் பொது அமைப்புக்களின் பிரதிநிதிகள், ஊடகவியலாளர்கள் என பலரும் கலந்து கொண்டிருந்தனர்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |

விரைவில் ஒளிபரப்பாக போகும் நடிகை குஷ்பு நடிக்கும் புதிய சீரியல்... எந்த டிவி, நேரம் முழு விவரம் Cineulagam

40 வயது நடிகருக்கு ஜோடியாகும் நாக சைதன்யாவின் மனைவி சோபிதா.. திருமணத்திற்கு பின் கிடைத்த தமிழ் படம் Cineulagam

முதல் முயற்சியிலேயே UPSC தேர்வில் தேர்ச்சி பெற்று.., ஐஏஎஸ் ஆகாத மிஸ் இந்தியா இறுதிப் போட்டியாளர் News Lankasri
