திருகோணமலை மாவட்டத்தில் அதிகரித்துள்ள கசிப்பு உற்பத்தி
திருகோணமலை மாவட்டத்தில் தமிழ் மக்களின் பிரச்சனைகளை யாரும் கண்டுகொள்வதில்லை. அதனால் கட்சிகளின் நலனை காட்டிலும் தமிழ் மக்களின் நலனை முதன்மைப்படுத்தி தமிழ் தேசிய கட்சிகள் கூட்டுச் சேர்ந்து உள்ளூராட்சி ஆட்சி அதிகாரத்தை நிலைநாட்டி மக்களின் அத்தியவசிய பிரச்சனைகளை தீர்த்து வைக்க முன்வரவேண்டும் என தமிழர் சமூக ஜனநாயகக் கட்சியின் திருகோணமலை மாவட்ட செயலாளர் சின்னமோகன் ஊடக அறிக்கையில் தெரிவித்துள்ளார்.
அறிக்கையில் மேலும் தெரிவிக்கையில்,
''கசிப்பு உற்பத்தியும் விற்பனையையும் திருகோணமலை மாவட்டத்தில் அதிகரித்து காணப்படுகின்றது. எனவே உடனடியாக இவ்விடயத்தில் கவனம் எடுத்து கட்டுப்படுத்தி நூற்றுக்கணக்கான குடும்பங்களின் வாழ்கையில் ஒளியேற்ற முன்வர வேண்டும்.
பனை உற்பத்திப் பொருட்கள்
திருகோணமலை - உப்புவெளி பிரதேச சபைக்கு உட்பட்ட சிறிய கட்டிடத்தில் பனை உற்பத்திப் பொருட்கள் மட்டும் விற்பனை செய்வதற்காக வாடகைக்கு விடப்பட்டுள்ளது.
ஆனால் இந்த பிரதேச மக்களுக்கு முன்னுரிமை கொடுக்காமல் பணத்தை மட்டும் நோக்காக கொண்டு வேறு மாவட்ட ஒருவருக்கு குத்தகைக்கு கொடுக்கப்பட்டுள்ளது.
இவைகள் தொடர்பாக உப்புவெளி பிரதே சபையின் ஆட்சியை அதிகாரத்தை எடுத்தவுடன் நீங்கள் நடவடிக்கை எடுப்பிர்கள் என்று இப்பிரதேச மக்கள் சார்பில் எதிர்பார்க்கின்றேன்" என அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |





5 போர் விமானங்கள் சுட்டு வீழ்த்தப்பட்டன... ஆபரேஷன் சிந்தூர் தொடர்பில் ட்ரம்ப் மீண்டும் அதிரடி News Lankasri

ஜேர்மனி பிரித்தானியா ஒப்பந்தம் கையெழுத்து: சிறிது நேரத்தில் ரஷ்யாவிலிருந்து வந்த எச்சரிக்கை News Lankasri

பிரான்ஸ் அழகியை திருமணம் செய்வதற்காக 700 கிலோமீற்றர் பயணித்த நபர்: காத்திருந்த ஏமாற்றம் News Lankasri

அறிவுக்கரசிக்கு ஈஸ்வரி கொடுத்த பைனல் டச் என்னா அடி, சக்தி, ஜனனி காதல்.. தரமான எதிர்நீச்சல் புரொமோ Cineulagam
