நாட்டின் பண வீக்கத்தில் ஏற்பட்டுள்ள சடுதியான மாற்றம்
நாட்டின் பணவீக்கம் மே மாதத்துடன் ஒப்பிடும் போது ஜூன் மாதம் அதிகரித்துள்ளதாக சனத்தொகை கணக்கெடுப்பு மற்றும் புள்ளிவிபர திணைக்களம் தெரிவித்துள்ளது.
அதன்படி, 2024 மே மாதம் 1.6 சதவீதமாக பதிவாகிய இலங்கையின் பணவீக்கம் 2024 ஜூன் மாதம் 2.4 சதவீதமாக அதிகரித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
புள்ளிவிபரங்கள்
இதேவேளை 2024 ஜூன் மாதத்திற்கான இலங்கையின் தேசிய நுகர்வோர் விலைச் சுட்டெண் மற்றும் மாதாந்திர நுகர்வோர் பணவீக்கமும் வெளியிடப்பட்டுள்ளது.
இதன்படி, மே 2024 இல் 0.5 சதவீதமாக இருந்த உணவு வகை பணவீக்கம் ஜூன் 2024 இல் 1.9 சதவீதமாக அதிகரித்துள்ளது.
மேலும், உணவு அல்லாத வகையின் பணவீக்கம் மே 2024 இல் 2.4 சதவீதமாக இருந்து ஜூன் 2024 இல் 2.7 சதவீதமாக அதிகரித்துள்ளது.
இந்த காலகட்டத்தில் போக்குவரத்து பணவீக்கம் 6.9 சதவீதத்தில் இருந்து 7.5 சதவீதமாக அதிகரித்துள்ளது.
அதேசமயம், விருந்தகங்கள் மற்றும் உணவகங்கள் பிரிவின் பணவீக்கம் 4.9 சதவீதத்தில் இருந்து 4.3 சதவீதமாக குறைந்துள்ளது.
மதுபானங்கள் மற்றும் புகையிலை வகைகளின் பணவீக்கம் 26.6 சதவீதத்தில் இருந்து 27. 1 சதவீதமாக உயர்ந்துள்ளது.
மேலதிக தகவல் - சிவா மயூரி

விரைவில் ஒளிபரப்பாக போகும் நடிகை குஷ்பு நடிக்கும் புதிய சீரியல்... எந்த டிவி, நேரம் முழு விவரம் Cineulagam

40 வயது நடிகருக்கு ஜோடியாகும் நாக சைதன்யாவின் மனைவி சோபிதா.. திருமணத்திற்கு பின் கிடைத்த தமிழ் படம் Cineulagam

ட்ரம்புக்கு பதிலடி... 8,000 அமெரிக்க தயாரிப்புகள் மீது வரி விதிக்க பிரித்தானியா முடிவு News Lankasri
