உமையாள்புரம் பகுதியில் அதிகரித்துள்ள சட்டவிரோத மணல் அகழ்வு
கிளிநொச்சி - கண்டாவளை ,உமையாள்புரம் பிரதேசத்தில் அதிகளவில் சட்டவிரோத மணல் அகழ்வு இடம்பெற்று வருகின்றமை தொடர்பில் பொது மக்கள் கவலை தெரிவித்துள்ளனர்.
உமையாள்புரம் பிரதேசம் ஆனையிறவு கடல் நீரேரிக்கு அருகில் உள்ள கிராமத்தின் பெரும்பாலான பகுதிகள் உவராக காணப்படுகிறது. உவராக காணப்படும் பிரதேசத்தின் அளவு அதிகரித்து வரும் நிலையில், குறித்த பகுதியில் இடம்பெறும் சட்டவிரோத மணல் அகழ்வு இதனை விரைவுப்படுத்தும் எனவும் பொதுமக்கள் தெரிவித்துள்ளனர்.
கரைச்சி பிரதேச சபையின் கழிவு அகற்றும் பகுதியில் சட்டவிரோதமாக உழவு இயந்திரங்கள் மூலம் அகழப்படும் மணல் சேமிக்கப்பட்டு பின்னர் அங்கிருந்து ரிப்பர்களில் எடுத்துச் செல்லப்படுவதாகவும், தொடர்ச்சியாக இவ்வாறு இடம்பெற்று வருகின்றது எனவும் பொதுமக்கள் தெரிவித்துள்ளனர்.
சட்டவிரோத மணல் அகழ்வு காரணமாக அடிக்கடி வாள்வெட்டு சம்பவங்களும், குழு மோதல்களும் இடம்பெறுகிறது என்றும் கட்டுப்படுத்துமாறு பல தடவைகள் கோரிக்கை விடுத்த போதும் எவரும் இதுவரை கண்டுகொள்ளவில்லை எனவும் கிராம மக்கள் கவலை தெரிவித்துள்ளனர்.
எனவே, உமையாள்புரம் கிராமத்தின் எதிர்காலம் கருதி அதிகரித்துள்ள சட்டவிரோத செயற்பாடுகளை கட்டுப்படுத்த உரிய தரப்பினர்கள் விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும், முழுக்கிராமமும் இன்றும் ஒரு சில வருடங்களில் உவர் நிலமாக மாறிவிடும் என்றும் பொது மக்கள் கவலை தெரிவித்துள்ளனர்.







போலியான திருமணம்... நாடுகடத்தப்பட்ட புலம்பெயர் நபர் பிரித்தானியாவில் குடும்ப விசாவிற்கு விண்ணப்பம் News Lankasri

Gen Z போராட்டக்காரர்களுடன் இணைந்த ராணுவம் - நேபாளத்தையடுத்து மற்றொரு நாட்டில் ஆட்சி கவிழ்ப்பு? News Lankasri
