எரிபொருளின் விலையை உடனடியாக அதிகரித்தே ஆகவேண்டும்! மத்திய வங்கி கொடுக்கும் அழுத்தம்
எரிபொருள் விலையை அதிகரிக்க உடனடியாக நடவடிக்கை எடுக்கவேண்டும் என மத்திய வங்கி அரசாங்கத்திடம் கோரிக்கை விடுத்துள்ளது.
பெற்றோலிய கூட்டுத்தாபனம் தொடர்ந்து நட்டமடைந்து வருவதால் தொடர்ந்து கூட்டுத்தாபனத்தை முன்னெடுத்து செல்ல முடியாமல் போகுமென மத்திய வங்கியின் ஆளுநர் அஜித் நிவாட் கப்ரால் தெரிவித்துள்ளதாக கொழும்பு சிங்கள ஊடகம் ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது.
எரிபொருள் விலையை அதிகரிக்காவிட்டால் பெற்றோலிய கூட்டுத்தபானம் மாத்திரமன்றி கூட்டுத்தாபனத்தின் கடன் தொகை அரச வங்கி கட்டமைப்பை நெருக்கடிக்குள்ளாக்கும்.
நுண் பொருளியலுக்கான சகல காரணிகளையும் பாதுகாத்துக் கொள்வதற்கு மிக விரைவில் தற்போது எடுக்கவேண்டிய சரியான நடவடிக்கை, எரிபொருள் விலையை அதிகரிப்பதாகும் என அவர் மேலும் வலியுறுத்தியுள்ளார்.

இயற்கை விதியும் ஈழத் தமிழர் அரசியலும் 2 நாட்கள் முன்

சிந்துநதி நீர் நிறுத்தத்தால்.., பாகிஸ்தான் நடிகைக்கு தண்ணீர் போத்தல்களை அனுப்பிய இந்திய ரசிகர் News Lankasri

இந்தியா-பாக் பதற்றம் தீவிரம்: பாகிஸ்தான் அரசு ஊடகம் வெளியிட்ட அதிர்ச்சியூட்டும் செய்தி News Lankasri
