கிளிநொச்சியில் அதிகரித்த குரங்குகளின் அட்டகாசம் - விவசாயிகள் குற்றச்சாட்டு
கிளிநொச்சி - பூநகரி ஜெயாபுரம் கிராமத்தில் அதிகரித்துள்ள குரங்கு மற்றும் காட்டு யானை தொல்லைகளால் விவசாய நடவடிக்கைகளை முன்னெடுக்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளதாக அப்பகுதி மக்கள் தெரிவித்துள்ளனர்.
அத்துடன், அவர்களின் வாழ்வாதாரம் முற்றாக பாதிக்கப்பட்டுள்ளதாகவும் சுட்டிக்காட்டியுள்ளனர்.
கிளிநொச்சி - பூநகரி பிரதேச செயலாளர் பிரிவின் கீழுள்ள ஜெயாபுரம் கிராமத்தில் காட்டு யானைகளின் தொல்லை மற்றும் குரங்குகளின் தொல்லை என்றுமில்லாவாறு அதிகரித்துக் காணப்படுகின்றன.
காட்டு யானை அட்டகாசம்
இவ்வாறு, காட்டு யானை மற்றும் குரங்கு தொல்லை காரணமாக தமது வாழ்வாதாரமான விவசாய செய்கைகளை முன்னெடுக்க முடியாதுள்ளதாக பிரதேச மக்கள் சுட்டிக்காட்டியுள்ளனர்.

அதாவது, குறித்த கிராமத்தில் உள்ள கூடுதலானவர்கள் விவசாயத்தை தங்களுடைய வாழ்வாதார தொழிலாக கொண்டு வாழ்ந்து வரும் இவ்வாறான நிலையில் இரவு வேலைகளில் காட்டு யானைகளின் தொல்லையும் பகல் வேளைகளில் குரங்குகளின் தொல்லையும் அதிகரித்து காணப்படுகின்றன.
இது போன்று காட்டு யானை, குரங்கு மற்றும் ஏனைய விலங்குகளின் தொல்லை அதிகரித்து வருவதனால் தனது வாழ்வாதாரம் முற்றும் முழுதாக பாதிக்கப்பட்டுள்ளதாகவும் மக்கள் இவற்றை கட்டுப்படுத்துவதற்கு சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்ற கோரிக்கையை முன் வைத்துள்ளனர்.
