இலங்கையில் அதிகரித்துள்ள மரணங்கள்! மனநல மருத்துவர் வெளியிட்ட தகவல்
கடந்த ஆண்டுகளுடன் ஒப்பிடுகையில் இந்த ஆண்டு நாட்டில் தங்கள் உயிரை மாய்த்துக்கொண்டவர்களின் எண்ணிக்கை கணிசமாக அளவு அதிகரித்திருக்கலாம் என்று மனநல மருத்துவம் மற்றும் மூத்த விரிவுரையாளர் சத்துரி சுரவீர தெரிவித்துள்ளார்.
ஊடகங்களுக்கு உரையாற்றிய அவர்,
100,000 பேருக்கு 17 உயிரைப்போக்கிக்கொள்ளும் சம்பவங்கள் பதிவாகியுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.
உயிரைப்போக்கிக்கொள்ளும் சம்பவங்கள்
துரதிர்ஷ்டவசமாக, 2022 மற்றும் 2023 ஆம் ஆண்டுகளுக்கான தரவு எதுவும் இதுவரை பெறப்படவில்லை. எனினும் கடந்த நான்கு மாதங்களில் இந்த எண்ணிக்கை பாரியளவில் அதிகரித்துள்ளது என்று தகவல்;கள் வெளியாகியுள்ளன.
இலங்கையில் ஆண்டுதோறும் 3,000 உயிரை மாய்;த்துக்கொள்ளும் சம்பவங்கள் பதிவாகின்றன, கிட்டத்தட்ட எட்டு அல்லது ஒன்பது சம்பவங்கள் தினசரி பதிவாகியுள்ளன.
உயிரை மாய்த்துக்கொள்ளும் சம்பவங்கள், தற்போதைய பொருளாதார நெருக்கடியுடன்
இப்போது சிறிது அதிகரித்துள்ளன.
எனவே, குறித்த செய்திகளை வெளியிடும் போது ஊடகங்கள் மிகவும் பொறுப்புடன்
செயற்பட வேண்டுமென சத்துரி சுரவீர கோரிக்கை விடுத்துள்ளார்.