இலங்கை தொடர்பில் பிரித்தானிய மருத்துவ சஞ்சிகை வெளியிட்ட அதிர்ச்சித் தகவல்
இலங்கையில் நாளொன்றுக்கு சுமார் ஆயிரம் கருக்கலைப்புகள் இடம்பெறுவதாக பிரித்தானியாவின் லேன்ட்செட் மருத்துவ சஞ்சிகை அதிர்ச்சித் தகவல் வெளியிட்டுள்ளது.
நாட்டில் சமூக பாதுகாப்பு நிலைமை வீழ்ச்சியடைந்த காரணத்தினால் இவ்வாறு அதிகளவு கருக்கலைப்புகள் பதிவாவதாக தெரிவிக்கப்படுகின்றது.
சமூகப் பாதுகாப்பு
பாடசாலை பிள்ளைகள், பல்கலைக்கழக மாணவியர், திருமணமாகாத பெண்கள், திருமணமான பெண்கள் உள்ளிட்டவர்கள் இவ்வாறு கருக்கலைப்பு செய்து கொள்வதாக ஆய்வு மூலம் தெரியவந்துள்ளது என நிபுணத்துவ மருத்துவர் ஜீ.ஜீ சமால் சஞ்சீவ தெரிவித்துள்ளார்.
நாட்டில் சமூகப் பாதுகாப்பு நிலைமைகளில் காணப்படும் குறைபாடு காரணமாக பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாகும் சிறுமியரின் எண்ணிக்கை அதிகம் என தெரிவித்துள்ளார்.
நோய்களுக்கு சிகிச்சை
பால்வினை நோயாளர்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
மேலும் இந்த பால்வினை நோய்களுக்கு சிகிச்சை அளிக்கக் கூடிய மருத்துவர்கள் பலர் வெளிநாடு சென்றுள்ளதாகத் தெரிவித்துள்ளார்.
நாட்டின் சமூகப் பொருளாதார காரணிகளினால் இவ்வாறு வெளிநாடு சென்றுள்ளதாகவும் இதனால் பால்வினை நோய்களுக்கு சிகிச்சை அளிப்பதில் சவல்களை எதிர்நோக்க நேரிட்டுள்ளது எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |





தயவுசெய்து இந்த சீரியலை முடித்துவிடுங்கள், கதறும் சன் டிவி சீரியல் ரசிகர்கள்... அப்படி என்ன தொடர் Cineulagam

இந்தியக் கடற்படைக்கு ரூ.1 இலட்சம் கோடி மதிப்பில் 9 அதிநவீன நீர்மூழ்கி கப்பல்கள்., CCS ஒப்புதல் விரைவில் News Lankasri
