நாடாளுமன்றிற்கு வழங்கப்படும் பாதுகாப்பினை அதிகரிக்கத் தீர்மானம்
நாடாளுமன்றிற்கு வழங்கப்படும் பாதுகாப்பினை அதிகரிப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது.
வரவு செலவுத் திட்டம் சமர்ப்பிக்கப்படும் போது நாடர்ளுமன்றின் பாதுகாப்பினை அதிகரிப்பதற்கு நடவடிக்கை எடுக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
நாடாளுமன்றின் பாதுகாப்பினை அதிகரிக்கவும், சுகாதார பாதுகாப்பு வழிமுறைகளை பலப்படுத்தவும் நடவடிக்கை எடுக்கப்படும் என நாடாளுமன்றின் படைக்கள சேவிதர் நரேந்திர பெர்னாண்டோ தெரிவித்துள்ளார்.
இதன்படி, 8ம் திகதி நாடாளுமன்றம் வருவோருக்கு ரெபிட் என்டிஜன் பரிசோதனை நடாத்தப்பட உள்ளது.
நாடாளுமன்ற பொதுச் செயலளார் அலுவலக பணியாளர்கள், ஏனைய அலுவலக பணியாளர்கள், நாடாளுமன்ற ஊடகவியலாளர்கள் மற்றும் பாதுகாப்பு பிரிவு அதிகாரிகள் உள்ளிட்ட அனைத்து தரப்பினரும் பரிசோதனைக்கு உட்படுத்தப்பட உள்ளனர்.
எதிர்வரும் 8ம் திகதி காலை 9.00 மணி முதல் 12 மணி வரையில் பரிசோதனை நடாத்தப்பட உள்ளது. வரவு செலவுத் திட்ட யோசனை எதிர்வரும் 12ம் திகதி நாடாளுமன்றில் சமர்ப்பிக்கப்பட உள்ளமை குறிப்பிடத்தக்கது.