அரச ஊழியர்களின் சம்பளத்தை அதிகரிக்க வேண்டும் - இம்ரான் எம்.பி கோரிக்கை

Government People Imran Maharoof Government Staff
By Independent Writer Oct 17, 2021 05:56 AM GMT
Report

தற்போது தாங்க முடியாத அளவு அதிகரித்துள்ள விலைவாசியைக் கருத்தில் கொண்டு அரச ஊழியர்களின் சம்பளத்தைக் குறைந்த பட்சம் 10 ஆயிரம் ரூபாவினால் அதிகரிக்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என  திருகோணமலை மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் இம்ரான் மகரூப்(Imran Maharoof) தெரிவித்துள்ளார். 

ஊடகங்களுக்கு இன்று(17) வெளியிட்டுள்ள அறிக்கையிலேயே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டுள்ளார். 

குறித்த அறிக்கையில் மேலும், 

“விலைவாசி உயர்வினால் பொதுமக்கள் படும் கஷ்டங்களை அவதானிக்கும் போது அரச ஊழியர்களின் சம்பளம் குறைந்த பட்சம் 10 ஆயிரம் ரூபாவினால் அதிகரிக்கப்பட வேண்டும்.

அப்போது தான் வாழ்க்கைச் செலவுச் சுமையை ஓரளவுக்கேனும் அவர்களால் தாங்கிக் கொள்ள முடியும்.

சமூகத்தில் கௌரவத்தோடு வாழும் அவர்கள் தங்களது அந்தஸ்தை இழக்கும் நிலையை உருவாக்கி விடாதிருக்க அரசு இந்த விடயத்தில் கவனம் செலுத்த வேண்டும்.

அதேபோல ஓய்வூதியம் பெறுபவர்களின் ஓய்வூதியத்திலும் கணிசமான அதிகரிப்புச் செய்யப்பட வேண்டும். சமுர்த்தி உள்ளிட்ட சகல அரச கொடுப்பனவுகளும் அதிகரிக்கப்பட வேண்டும்.

இதன் மூலம் மக்கள் கடன் இன்றி உண்ணும் சூழ்நிலை உருவாக்கப்பட வேண்டும். மக்களுக்காகத் தான் அரசு இருக்கின்றது.

எனவே, மக்களின் நலன் பேணும் விடயத்தில் அரசு கவனம் செலுத்த வேண்டும். அரசைக் கொண்டு நடத்த நிதி இல்லை என்பதற்காகச் சகல பொருட்களினதும் விலைவாசியைக் கண்ணை மூடிக் கொண்டு உயர்த்தி மக்களைத் துன்பத்திற்குள்ளாக்கும் நிலையை அரசு ஏற்படுத்தியுள்ளது.

இதிலிருந்து மக்களைப் பற்றிய எந்த அக்கறையும் இந்த அரசுக்கு இல்லை என்பது தெளிவாகத் தெரிகின்றது. கேஸ் உள்ளிட்ட சில பொருட்களின் விலை 100 வீதம் வரை அதிகரிக்கப்பட்டுள்ளது. இலங்கை வரலாற்றில் எந்த அரசும் செய்யாத ஒரு மோசமான விலை அதிகரிப்பு இதுவாகும்.

இந்த நிலையில் நாடு தான் முக்கியம் மக்கள் முக்கியமல்ல என்ற போர்வையில் சில அமைச்சர்கள் கருத்து வெளியிட்டு வருகின்றார்கள். மக்களைப் பற்றிய எந்த அக்கறையும் இந்த அரசுக்கு இல்லை என்பதற்கு இது நல்ல உதாரணமாகும்.

69 இலட்சம் மக்கள் ஆணை கொடுத்துத் தான் இவர்கள் ஆட்சிக்கு வந்தார்கள். ஆனால் இன்று இந்த மக்கள் ஓரங்கட்டப்பட்டு விட்டார்கள். அதிகாரத்தில் உள்ளவர்களது நலன் பேணும் நடவடிக்கைகளே இப்போது முன்னெடுக்கப்படுகின்றன.

இப்போது அரசு அபிவிருத்தியைப் பற்றிப் பேசுகின்றது. மக்களைப் பட்டினி போட்டு விட்டுச் செய்யப்படும் அபிவிருத்தி தேவையா அல்லது மக்களின் வாழ்க்கைச் செலவைச் சீர்செய்ய நடவடிக்கை எடுத்து விட்டுச் செய்யப்படும் அபிவிருத்தி தேவையா என்பது குறித்துக் கேட்க விரும்புகின்றேன்” எனக் குறிப்பிட்டுள்ளார்.  

மரண அறிவித்தல்

இமையானன் கிழக்கு உடுப்பிட்டி, சுவிஸ், Switzerland, London East Ham, United Kingdom

14 Oct, 2026
மரண அறிவித்தல்

மீசாலை, Nashville, United States, Bethlehem, United States

10 Oct, 2026
மரண அறிவித்தல்

மலேசியா, Malaysia, தெல்லிப்பழை, Wembley, United Kingdom

09 Oct, 2026
மரண அறிவித்தல்

மானிப்பாய், Waterloo, Canada

04 Oct, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 2ம் வட்டாரம், புங்குடுதீவு 12ம் வட்டாரம், Markham, Canada

17 Oct, 2024
5ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், London, United Kingdom

24 Oct, 2021
5ம் ஆண்டு நினைவஞ்சலி

வாதரவத்தை, பாண்டியன்குளம்

15 Oct, 2021
7ம் ஆண்டு நினைவஞ்சலி

தெல்லிப்பழை, மாதகல், கொழும்பு, அவுஸ்திரேலியா, Australia

15 Oct, 2019
மரண அறிவித்தல்

உசன், கரவெட்டி, Markham, Canada

13 Oct, 2026
மரண அறிவித்தல்

சமரபாகு, வல்வெட்டி

13 Oct, 2026
மரண அறிவித்தல்
2ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 3ம் வட்டாரம், London, United Kingdom

13 Oct, 2024
மரண அறிவித்தல்
10ம் ஆண்டு நினைவஞ்சலி

ஏழாலை, யாழ்ப்பாணம், திருநெல்வேலி, யாழ்ப்பாணம்

18 Oct, 2016
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Scarborough, Canada

09 Oct, 2026
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US