மின் கட்டணத்தை அதிகரிப்பதை தவிர வேறு வழியில்லை:வெளியான தகவல்
அமைச்சரவையின் அங்கீகாரத்துடன் தமக்கு அனுப்பப்பட்ட மின்சார கட்டண திருத்தத்தில் பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு உடன்படவில்லை என்பதை அரசாங்கத்திற்கு அறிவிக்கவுள்ளதாக இலங்கை பொதுப்பயன்பாட்டு ஆணைக்குழுவின் தலைவர் ஜனக ரத்நாயக்க தெரிவித்துள்ளார்.
மின்சார கட்டண திருத்தம் தொடர்பில் ஊடகத்திடம் கருத்து தெரிவிக்கும் போதே அவர் இவ்வாறு கூறியுள்ளார்.
சட்டத்தை மீறி விலையை அதிகரிக்க முயற்சி
மேலும் கூறுகையில்,இலங்கை மின்சார சபைக்கு நாப்தா வழங்கும் போது, சட்டத்தை மீறி விலையை அதிகரிக்க முயற்சிப்பதை இலங்கை பெட்ரோலிய சட்டமூலக் கூட்டுத்தாபனம் அனுமதிக்காது.
இலங்கை மின்சார சபைக்கு பணம் செலுத்தாமல் நாப்தா வழங்குவதில்லை என்ற இலங்கை பெட்ரோலிய சட்டப்பூர்வ கூட்டுத்தாபனத்தின் தீர்மானத்தினால் களனிதிஸ்ஸ அனல்மின் நிலையத்தில் உள்ள நாப்தாவின் அளவு இன்று (13) காலை தீர்ந்து போயிருந்தது.
இந்நிலையில் இலங்கை பெட்ரோலியம் சட்டப்பூர்வ கூட்டுத்தாபனம் இன்றைய தினத்திற்கு தேவையான நாப்தாவை மட்டும் வழங்க ஏற்பாடு செய்துள்ளது.
களனிதிஸ்ஸ அனல்மின் நிலையம் செயலிழக்கும் அபாயம்
இதனால் இன்று அபாயம் தணிந்துள்ள போதிலும் நாளை (14) காலைக்குள் களனிதிஸ்ஸ அனல்மின் நிலையம் செயலிழக்கும் அபாயம் ஏற்பட்டுள்ளது.
களனிதிஸ்ஸ அனல்மின் நிலையம் செயலிழந்தால் தேசிய மின் உற்பத்திக்கு 165 மெகாவோட் இழப்பு ஏற்படும் எனத் தெரிவிக்கப்படுகிறது.
எவ்வாறாயினும்,நாப்தாவை கொள்வனவு செய்வதற்கு இலங்கை பெட்ரோலிய கூட்டுத்தாபனத்திற்கு பணம் செலுத்துவதற்கு தேவையான நிதி ஏற்பாடுகள் தற்போது மேற்கொள்ளப்பட்டு வருவதாக மின்சார சபை குறிப்பிட்டுள்ளது.” என தெரிவித்துள்ளார்.
இவ்வாறான பின்னணியில் மின் கட்டணத்தை அதிகரிப்பதை தவிர வேறு வழியில்லை என சிரேஷ்ட மின் பொறியியலாளர்கள் சங்கம் வலியுறுத்துகிறது.
இதேவேளை, களனிதிஸ்ஸ அனல்மின் நிலையம் இன்றிரவு முடக்கப்படும் அபாயம் காணப்படுவதாக இலங்கை மின்சார சபையின் கூட்டு தொழிற்சங்க கூட்டமைப்பின் அழைப்பாளர் ரஞ்சன் ஜயலால் தெரிவித்தார்.