இலங்கையின் வேலையின்மை விகிதம் அதிகரிப்பு
நாட்டில் ஏற்பட்டுள்ள பொருளாதார நெருக்கடி காரணமாக கடந்த ஆண்டின் (2023) இரண்டாம் காலாண்டில் நாட்டில் வேலையின்மை விகிதம் 5.2 சதவீதமாக அதிகரித்துள்ளதாக நிதியமைச்சு வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
கடந்த ஆண்டின் முதல் காலாண்டில், இலங்கையில் வேலையின்மை விகிதம் 4.7 சதவீதமாக இருந்த நிலையில், இரண்டாவது காலாண்டில் அது 5.2 சதவீதமாக அதிகரித்துள்ளது.
இதன்படி, கடந்த ஆண்டின் இரண்டாம் காலாண்டில், இளம் வயதினரின் (15-24 வயது) வேலையின்மை விகிதம் ஏனைய வயதினரையும் விட 25.8 சதவீதமாக அதிகரித்துள்ளது.
வேலையின்மை விகிதம்
மேலும், கடந்த 2023 ஆம் ஆண்டின் இரண்டாம் காலாண்டில் தொழிலாளர் பங்கேற்பு விகிதம் 48.6 சதவீதமாகக் குறைந்துள்ளது.
இவ்வாறான சூழ்நிலையில், பொருளாதார நடவடிக்கைகள் காரணமாக 2024 ஆம் ஆண்டில் இலங்கையின் வேலையின்மை விகிதம் 05 சதவீதத்திற்கும் குறைவாகவே இருக்கும் எனவும் எதிர்பார்க்கப்படுகின்றது.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |





ஊழல் ஒழிப்பு கோஷத்தை ஊளையிடுதல் ஆக்கிய ரணில்..! 12 மணி நேரம் முன்

திருமண பேச்சுக்கு அழைத்து இளைஞரை அடித்துக் கொன்ற காதலி குடும்பம்! POCSO வழக்கில் காதலன் News Lankasri

Vijay Television Awards: அதிக விருதுகளை தட்டிதூக்கிய சீரியல் எது தெரியமா.. வென்றவர்களின் லிஸ்ட் இதோ Cineulagam

30 லட்சம் இழப்பீடு பெற்ற செவிலியர்! பிரித்தானியாவில் கண்ணசைவுகளால் துன்புறுத்திய சக பெண் ஊழியர்! News Lankasri

சிறகடிக்க ஆசை வெற்றி வசந்த் மனைவிக்கு என்ன ஆச்சு.. கதறி அழும் பொன்னி சீரியல் வைஷ்ணவி.. வைரல் வீடியோ Cineulagam
