கோதுமை மாவின் விலை உயர்வால் பாதிக்கப்பட்ட மக்கள்! நேரடி ரிப்போர்ட் (Video)
கோதுமை மாவின் விலை கடந்த 27 ஆம் திகதி முதல் 17 ரூபாய் 50 சதத்தினால் அதிகரிக்கபட்டுள்ளது.
டொலர் பிரச்சினை காரணமாக கோதுமை மா இறக்குமதி மட்டுப்படுத்தப்பட்டுள்ளது.
அதன் காரணமாக சந்தையில் கோதுமை மா தட்டுப்பாடும் ஏற்பட்டுள்ளது.
நாட்டில் இரண்டு பிரதான நிறுவனங்கள் கோதுமை மா விநியோகத்தை முன்னெடுக்கின்றன.
பாண் தயாரிப்பிற்கு பயன்படுத்தப்படும் கோதுமை கடந்த மாதம் 27 ஆம் திகதி முதல் 17 ரூபா 50 சதத்தினாலும், ஏனைய உணவு பொருட்களுக்கான மாவின் விலை 130 ரூபாவினாலும் அதிகரிக்கப்பட்டன.
கடந்த காலங்களில் மாவின் விலை 8 ரூபா தொடக்கம் 10 ரூபா வரையில் மாத்திரம் அதிகரிக்கப்பட்டதால் மக்கள் பெரும் நெருக்கடிகளை எதிர்க்கொள்ள நேரிட்டுள்ளது.
நட்டமடைந்த நிலையில் விற்பனை பொருட்களின் விலையை அதிகரிக்காமல் தொடர்ந்து சேவை நடவடிக்கைகளை முன்னெடுத்து செல்ல முடியாத காரணத்தினாலும் , 450 கிராம் நிறையுடைய ஒரு இறாத்தல் பாணின் விலையை 10 ருபாவினாலும், ஏனைய பேக்கரி உணவு பொருட்களின் விலையை நுகர்வோருக்கு பாதிப்பு ஏற்படாத வகையில் 5 ரூபா தொடக்கம் 10 ரூபா வரையில் அதிகரிக்க தீர்மானிக்கப்பட்டது என்று சிற்றுண்டி உரிமையாளர் சங்கத்தினரால் தீர்மானிக்கப்பட்டது.
அதற்கமைய ஒரு கிலோ கிராம் கோதுமை மாவின் விற்பனை விலை 10 ரூபாவினால் அதிகரிக்கப்பட்டு புதிய விலை 97 ரூபா என குறிப்பிடப்பட்டது.
கோதுமைமாவின் விற்பனை விலை அதிகரிக்கப்பட்டதை தொடர்ந்து பாண் ஒரு இறாத்தலின் விலை 5 ரூபாவினாலும், பணிஸ், டீ பணிஸ், பால்தேநீர் ஆகியவற்றின் விலை 10 ரூபாவினாலும் அதிகரிக்கப்பட்டது.
உணவு பொதி ஒன்றின் விலை 10 ரூபாவினாலும்,தேநீர் கோப்பை ஒன்றின் விலை 05 ரூபாவினாலும் இம்மாதம் 23ஆம் திகதி முதல் அதிகரிக்கப்பட்டுள்ளது.
அவ்வாறான நிலையில் தற்போது மீண்டும் பாண் மற்றும் பேக்கரி உணவு பொருட்களின் விலைகளும், சிற்றுண்டி உணவு பொருட்களின் விலைகளும் அதிகரிக்கப்பட்டுள்ளன.
