பண்டிகை காலத்தில் மக்களுக்கு ஏற்படவுள்ள நெருக்கடி:மற்றுமொரு விலை அதிகரிப்பு
பண்டிகைக் காலத்தில் அரிசியின் விலையில் அதிகரிப்பு ஏற்பட வாய்ப்புள்ளதாக இலங்கை சிறு மற்றும் நடுத்தர அரிசி ஆலை உரிமையாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.
ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துக்கொண்டு கருத்து தெரிவிக்கும் போதே இலங்கை சிறு மற்றும் நடுத்தர அரிசி ஆலை உரிமையாளர்கள் சங்கத்தின் தலைவர் யூ.கே.சேமசிங்க இதனை தெரிவித்துள்ளார்.
விவசாயிகளுக்கோ அல்லது நுகர்வோருக்கோ பயன் இல்லை
வெளிநாடுகளில் இருந்து அரிசி இறக்குமதி செய்வதை நிறுத்த அரசாங்கம் தீர்மானித்ததன் மூலம் இவ்வாறு அரிசியின் விலை அதிகரிக்கப்படலாம் என தெரிவித்துள்ளார்.
ஏற்கனவே ஒரு கிலோ அரிசியின் விலை ஏற்கனவே 115 ரூபாவாக அதிகரித்துள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.
எனவே அரிசி இறக்குமதியை நிறுத்துவதன் பயன் விவசாயிகளுக்கோ அல்லது நுகர்வோருக்கோ கிடைக்கப்போவதில்லை என அவர் மேலும் தெரிவித்துள்ளார்.