கோவிட் காலத்தில் சூட்டு காயங்களுக்கு இலக்காகும் சம்பவங்களின் எண்ணிக்கை உயர்வு
கோவிட் பெருந்தொற்று காலப் பகுதியில் சூட்டுக் காயங்களுக்கு இலக்காகும் சம்பவங்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது.
தற்போதைய கோவிட் காலப் பகுதியில் சூட்டு காயங்களின் எண்ணிக்கை வெகுவாக அதிகரித்துள்ளதாக பிளஸ்டிக் சத்திரசிகிச்சை நிபுணர் சத்தீஸ் விஜேமான்ன தெரிவித்துள்ளார்.
வெப்பமான திரவங்கள் குறிப்பாக சூடு நீர் காரணமாக ஏற்பட்ட சூட்டுக் காயங்களினால் வைத்தியசாலைகளில் அனுமதிக்கப்படும் நோயாளிகள் எண்ணிக்கை அதிகரித்துள்ளது என அவர் குறிப்பிட்டுள்ளார்.
கோவிட் பெருந்தொற்று பரவுகையை கட்டுப்படுத்தும் நோக்கில் நீராவிப் பிடிப்பதனால் இவ்வாறான விபத்துக்கள் அதிகம் பதிவாகின்றது என தெரிவித்துள்ளார்.
நீராவி பிடிப்பதனால் கோவிட் தொற்றுவதனை தவிர்க்க முடியும் என இதுவரையில் நிரூபணம் செய்யப்படவில்லை என அவர் குறிப்பிட்டுள்ளார். எவ்வாறெனினும் தடிமனை நீராவி கட்டுப்படுத்தும் என அவர் தெரிவித்துள்ளார்.
நீராவி பிடிக்கும் போது மக்கள் மிகுந்த அவதானத்துடன் செயற்பட வேண்டுமென குறிப்பிட்டுள்ளார்.
ஸ்ருதி வீட்டு உணவால் அவதிப்படும் விஜயா, எலி தொல்லையில் மாட்டிக்கொண்ட மனோஜ்.. சிறகடிக்க ஆசை சீரியல் புரோமோ Cineulagam
அட சன் டிவி சீரியல் நடிகைகளா இவர்கள், எல்லோரும் எவ்வளவு அழகு பாருங்க... இதுவரை பார்க்காத போட்டோ Cineulagam