உத்தியோகபூர்வ கையிருப்பின் அளவு 3 பில்லியனாக உயர்வு
2023, 31 மே மாத நிலவரப்படி மொத்த உத்தியோகபூர்வ கையிருப்பின் அளவு 3
பில்லியன் அமெரிக்க டொலர்களை தாண்டியுள்ளதாக இலங்கை மத்திய வங்கி
தெரிவித்துள்ளது.
எனினும் இதில் 1.4 பில்லியன் அமெரிக்க டொலர்களுக்கு சமமான, சீனாவின் மக்கள் வங்கியின் இடமாற்று வசதியும் அடங்கும், இது பயன்பாட்டிற்கான நிபந்தனைகளுக்கு உட்பட்ட தொகையாகும்.
மத்திய வங்கி அறிவிப்பு
இந்தநிலையில் அண்மையில் மேற்கொள்ளப்பட்ட கொள்கை மதிப்பாய்வில், 2023 ஆம் ஆண்டில் இதுவரை உள்நாட்டு அந்நியச் செலாவணி சந்தையில் இருந்து கணிசமான அளவு அந்நியச் செலாவணியை உள்வாங்கியுள்ளதாக மத்திய வங்கி கூறியுள்ளது.
இதன் விளைவாகவே மொத்த உத்தியோகபூர்வ கையிருப்பில் நிலையான அதிகரிப்பு ஏற்பட்டுள்ளதாகவும் மத்திய வங்கி குறிப்பிட்டுள்ளது.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP இல் இணையுங்கள் JOIN NOW |