காய்கறிகளின் விலை அதிகரிப்பு: ஒரு கிலோகிராம் பச்சை மிளகாய் 1000 ரூபாய்
ஹட்டன் நகரில் ஒரு கிலோகிராம் பச்சை மிளகாயின் விலை ஆயிரம் ரூபாயாக அதிகரித்துள்ளதுடன் ஏனைய காய்கறிகளின் விலையும் கடுமையாக அதிகரித்துள்ளதால், மக்கள் பல்வேறு கஷ்டங்களை எதிர்நோக்கி வருகின்றனர்.
பச்சை மிளகாயை தவிர ஒரு கிலோகிராம் கறி மிளகாய் 500 முதல் 550 ரூபாவுக்கும், வட்டக்காய் 240 முதல் 250 ரூபாவுக்கும், ஒரு கிலோகிராம் பாவற்காய் 350 முதல் 370 ரூபாவுக்கும், கரட், புடலங்காய், கத்தரிக்காய், வெண்டிக்காய், போஞ்சி போன்ற காய்காறிகள் 220 முதல் 250 ரூபாவுக்கும் விற்பனை செய்யப்படுகின்றன.
இதனை தவிர லீக்ஸ், கோவா போன்ற காய்கறிகளும் 180 முதல் 220 ரூபாவுக்கு விற்பனை செய்யப்படுகின்றன.
இந்த நிலைமையால் காய்கறிகளை கொள்வனவு செய்யும் போது தாம் பெரும் கஷ்டங்களை எதிர்நோக்கி வருவதாக மக்கள் தெரிவித்துள்ளனர். விலை அதிகரிப்பு காரணமாக காய்கறி விற்பனையும் குறைந்துள்ளதாக வர்த்தகர்கள் கூறியுள்ளனர்.
ஹட்டன் உட்பட நுவரெலியா மாவட்டத்திலேயே காய்கறிகள் விளைவிக்கப்படுகின்றன.
அந்த மாவட்டத்திலேயே காய்கறிகளின் விலைகள் அதிகரித்துள்ளதால், ஏனைய மாவட்டங்களில் காய்கறிகளின் விலைகள் மேலும் அதிகரித்துள்ளதாக கூறப்படுகிறது.





யாழ்ப்பாணமே நீ குடிப்பது நல்ல தண்ணியா 2 நாட்கள் முன்

ரோஹினி, க்ரிஷை பற்றி முத்துவிடம் கூறிய மீனா, அடுத்து என்ன நடக்கப்போகிறது.. சிறகடிக்க ஆசை பரபரப்பு புரொமோ Cineulagam
