காலி மாவட்டத்தில் எச்.ஐ.வி தொற்றாளர்களின் எண்ணிக்கை அதிகரிப்பு
காலி மாவட்டத்தில் எச்.ஐ.வி தொற்றுக்குள்ளானவர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருவதாக சுகாதார அதிகாரிகள் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.
2021 ஆம் ஆண்டு மஹமோதர வைத்தியசாலையில் 25 எச்ஐவி தொற்றுக்குள்ளானவர்கள் கண்டறியப்பட்டுள்ளனர்.
எனினும் கடந்த வருடத்தில் 36 பேர் எச்ஐவி தொற்றுக்கு உள்ளானதாக காலி மஹமோதர வைத்தியசாலையின் பால்வினை நோய் தடுப்பு பிரிவின் வைத்திய அதிகாரி தர்ஷனி விஜேவிக்கிரம தெரிவித்துள்ளார்.
தொற்றாளர்களின் எண்ணிக்கை அதிகரிப்பு
நோய்த்தொற்றுக்கு உள்ளான நோயாளிகள் இன்னும் அதிகமாக இருப்பார்கள் என்றும் இன்னும் அடையாளம் காணப்படவில்லை என்றும் அவர் சுட்டிக்காட்டியுள்ளனர்.
பாதிக்கப்பட்டவர்களில் பெரும்பாலானோர்; 20 வயதுக்கு மேற்பட்ட ஆண்கள் என்று அவர் கூறியுள்ளார்.
இதேவேளை கடந்த ஆண்டு ஜனவரி முதல் செப்டம்பர் வரை இலங்கையில் 427 எச்.ஐ.வி நோயாளிகள் பதிவாகியுள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.
எயிட்ஸ் ஆபத்தான விகிதத்தில் பரவி வருவதாக கலாநிதி திருமதி விஜேவிக்ரம கவலை
குறிப்பிட்டுள்ளார்.

Optical illusion: படத்தில் '44' மற்றும் '33' என்ற மாறுபட்ட இலக்கங்களில் '88' எங்கே மறைந்துள்ளது? Manithan

பிரியங்கா தேஷ்பாண்டே திருமணத்தில் கலந்துகொண்ட விஜய் டிவி பிரபலங்கள்.. யார் யார் தெரியுமா, இதோ பாருங்க Cineulagam
