வடக்கில் அதிகரிக்கும் டெங்கு நோயாளர்கள்: யாழில் மாத்திரம் ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் அடையாளம்
வட மாகாணத்தில் இவ்வருடத்தின் ஜூன் மாத கால பகுதி வரை 1834 டெங்கு நோயாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளதாக வடமாகாண சுகாதார சேவைகள் திணைக்களம் தெரிவித்துள்ளது.
இந்நிலையில், யாழ். மாவட்டத்தில் மாத்திரம் 1527 பேர் அடையாளம் காணப்பட்டுள்ளனர் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும், கிளிநொச்சி மாவட்டத்தில் 64 பேரும் மன்னார் மாவட்டத்தில் 66 பேரும் வவுனியா மாவட்டத்தில் 107 பேரும் முல்லைத்தீவு மாவட்டத்தில் 70 பேரும் டெங்கு நோயாளர்களாக அடையாளம் காணப்பட்டுள்ளனர்.
நோயாளர்களின் எண்ணிக்கை
இலங்கையில் இந்த வருடம் ஜூன் மாத இறுதிவரை கண்டறியப்பட்ட மொத்த டெங்கு நோயாளிகளின் எண்ணிக்கையானது 2021 ம் ஆண்டு இலங்கையில் ஆண்டு முழுவதும் கண்டறியப்பட்ட டெங்கு நோயாளர்களின் எண்ணிக்கையை விட அதிகமாக காணப்படுவதாக சுகாதார திணைக்களத்தின் டெங்கு ஒழிப்பு விசேட பிரிவு அண்மையில் அறிக்கை ஒன்றை வெளியிட்டிருந்தது.
இந்நிலையில், டெங்கு நோய் அதிகம் பாதிப்பது சிறுவர்கள் எனவும், தங்களின் பிள்ளைகள் மீது பெற்றோர்கள் கவனம் செலுத்த வேண்டும் எனவும் சுகாதார திணைக்களம் அறிவித்திருந்தது.
வீதிகளில் கழிவுகள் காணப்படுதல் மிக முக்கியமான பிரச்சினை ஆகும். 90விதமான மக்கள் வீதிகளில் கழிவுகளை வீசும் போது அதில் அதிகம் நுளம்பு பரவுவதாக கூறப்பட்டுள்ளது.
எனவே டெங்கு நோயிலிருந்து எம்மை பாதுகாத்துக் கொள்ள சுற்றுச்சூழலை சுத்தமாக பேணுவதனால் டெங்கு நுளம்பில் இருந்து தங்களை பாதுகாத்துக் கொள்ள முடியும் என்பது குறிப்பிடத்தக்கது.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP இல் இணையுங்கள் JOIN NOW |
