பாடசாலை சிறுமிகள் தொடர்பில் வெளியான அதிர்ச்சி தகவல்!
நாட்டில் பாடசாலை செல்லும் வயதுடைய சிறுமிகள் கருவுறும் எண்ணிக்கை கணிசமாக அதிகரித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
இந்த விடயமானது பொலிஸ் சிறுவர்கள் மற்றும் பெண்கள் அத்துமீறல் தொடர்பான விசாரணைப் பிரிவின் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அந்த அறிக்கையில் உள்ள தரவுகளின்படி, 2023 ஆம் ஆண்டில் 167 பாடசாலை வயது சிறுமிகள் கருவுற்றதாகவும் 2024 ஆம் ஆண்டில் இவ்வாறான 213 சம்பவங்கள் பதிவாகியுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
வழக்கு
2024 ஆம் ஆண்டில் அடையாளம் காணப்பட்ட கர்ப்பிணி சிறுமிகள் மத்தியில் 10 வயது சிறுமியொருவர் உள்ளடங்கியிருந்ததாகச் சிறுவர் மற்றும் மகளிர் அத்துமீறல் விசாரணைப் பிரிவுக்குப் பொறுப்பான பிரதி பொலிஸ்மா அதிபர் ரேணுகா ஜயசுந்தர தெரிவித்துள்ளார்.
இதேவேளை, 1989 ஆம் ஆண்டு நவம்பர் 20 ஆம் திகதியன்று ஐக்கிய நாடுகள் சபையின் அங்கீகரிக்கப்பட்ட சிறுவர்களின் உரிமைகள் தொடர்பான மாநாட்டின் படி, 18 வயதுக்குட்பட்ட அனைவரும் சிறுவர்களாகக் கருதப்படுகின்றனர்.
இந்தநிலையில் ,தகாதமுறைக்கு உள்ளாகின்ற சிறுவர்கள் தொடர்பான வழக்குகளை விரைவுபடுத்துவதற்கான முன்மொழிவு சமர்ப்பிக்கப்பட்டுள்ளதாக ரேணுகா ஜயசுந்தர தெரிவித்துள்ளார்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |

இந்து சமுத்திரத்தை பாதுகாக்க உக்ரைனில் இருந்து ட்ரம்ப் வெளியேறுகிறாரா..! 58 நிமிடங்கள் முன்

புதிய தொடரில் கமிட்டாகியுள்ள சன் டிவி சீரியல் புகழ் மான்யா ஆனந்த்... எந்த தொலைக்காட்சி தொடர்? Cineulagam

தெருக்களில் கிடந்த சடலங்கள்! உள்நாட்டில் வெடித்த கலவரம்..இரண்டு நாட்களில் 1000 பேர் பலி News Lankasri

முதல்முறையாக அணுசக்தி கப்பலை வெளிக்காட்டிய வடகொரியா! அமெரிக்காவுக்கும் அச்சுறுத்தல் என தென்கொரியா பதற்றம் News Lankasri
