கடத்தல் மற்றும் ஆட்கடத்தல்கள் அதிகரிப்பு: இந்திய கிழக்கு கடற்படை தளபதி தெரிவிப்பு
கடத்தல் மற்றும் ஆட்கடத்தல் போன்ற நாடு கடந்த குற்றங்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளதாக இந்தியாவின் கிழக்கு பிராந்திய கடற்படை தளபதி வைஸ் அட்மிரல் சஞ்சய் வாத்சயன் தெரிவித்துள்ளார்.
தமிழகத்தின் அரக்கோணத்திலுள்ள I.N.S. ராஜாளி கடற்படை விமானத்தளத்தில் நடைபெற்ற நிகழ்வொன்றில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும் போதே இவ்வாறு தெரிவித்துள்ளார்.
இந்தோ – பசுபிக் பிராந்திய கடற்பரப்பில் இந்திய கடற்படையின் செயற்பாடுகள் பூகோள ரீதியாக முக்கியத்துவம் வாய்ந்ததாக அமைந்துள்ளது.
பொருளாதார அதிகார போராட்டம், ஊடுருவல் போன்ற அச்சுறுத்தும் செயற்பாடுகளும் அதிகரித்துள்ளது.
கூட்டு பயிற்சியில் இந்திய கடற்படை

இந்திய கடற்படையில், குறிப்பாக கடற்படை விமான போக்குவரத்தில் எந்த சவாலுக்கும் பதிலளிக்கும் வகையில் பயிற்சி அளிக்கப்பட்டு தயாராக இருப்பதாகவும் அவர் கூறியுள்ளார்.
இந்த வருடம் அமெரிக்கா, ரஷ்யா, இங்கிலாந்து, ஜப்பான், அவுஸ்திரேலியா, பிரான்ஸ், இலங்கை,
இந்தோனேஷியா, ஓமன், ஐக்கிய அரபு நாடுகள் உள்ளிட்ட கடல் பரப்பு நட்பு நாடுகளுடன், முழு
வீச்சில் கூட்டு பயிற்சியில் இந்திய கடற்படை ஈடுபட்டு வருகின்றது எனவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
Bigg Boss: ரெட் கார்டு பெற்றும் வெளியேற மறுத்த போட்டியாளர்... மண்டியிட்டு மன்னிப்பு கேட்ட தருணம் Manithan
பிரித்தானியாவின் மிகப்பெரிய பணக்காரர் காலமானார்: வணிக சாம்ராஜ்யத்தை உருவாக்கிய இந்தியர் News Lankasri
மனைவிக்கு மயக்க மருந்து கொடுத்துக் கொன்ற மருத்துவர்: ரகசியக் காதலிக்கு அனுப்பிய செய்தி சிக்கியது News Lankasri
இன்னும் திருந்தாத மயிலின் அப்பா, இப்போது செய்த காரியம், வெடிக்கப்போகும் பிரச்சனை... பாண்டியன் ஸ்டோர்ஸ் 2 Cineulagam
அந்த நாட்டு அகதிகள் வலுக்கட்டாயமாக வெளியேற்றப்படுவார்கள்... ஜேர்மன் சேன்சலர் திட்டவட்டம் News Lankasri