எரிபொருள் விலை அதிகரிப்பு காரணமாக மக்கள் மத்தியில் ஏற்பட்டுள்ள மாற்றம்
எரிபொருட்களின் விலைகள் அவ்வப்போது அதிகரித்து வருவதால் எரிபொருள் பெற வரும் வாடிக்கையாளர்களின் எண்ணிக்கை குறைந்துள்ளதாக எரிபொருள் நிரப்பு நிலைய உரிமையாளர்கள் தெரிவித்துள்ளனர்.
எரிபொருள் நிரப்பு நிலையங்களுக்கு எரிபொருள் பெற வரும் வாடிக்கையாளர்களின் எண்ணிக்கை சுமார் முப்பது வீதத்தால் குறைந்துள்ளதாக தெரிவித்துள்ளனர்.
உரிமையாளர்களின் கவலை

எரிபொருட்களின் விலைகள் அவ்வப்போது அதிகரித்து வருவதாலும், எரிபொருளைக் கொள்வனவு செய்வதை விட ஏனைய தேவைகளுக்கு முன்னுரிமை வழங்கப்படுவதாலும் இந்த நிலைமை ஏற்பட்டுள்ளதாகவும் சுட்டிக்காட்டியுள்ளனர்.
எரிபொருள் கையிருப்பு போதுமான அளவு உள்ள போதிலும், முன்பு ஒரு நாளில் பெட்ரோல் மற்றும் டீசல் கையிருப்பு தீர்ந்து போனதாகவும், ஆனால் தற்போது அந்த இருப்புக்கள் இரண்டு நாட்கள் வரை இருப்பதாகவும் பெட்ரோல் நிலைய உரிமையாளர்கள் தெரிவித்துள்ளனர்.
பீகார் சென்ற அய்யனார் துணை குடும்பத்திற்கு ஷாக் கொடுத்த சந்தா அப்பா... புதிய பரபரப்பான புரொமோ Cineulagam
வாய்ப்பே இல்லை... ஹார்முஸ் நீரிணை விவகாரத்தில் ட்ரம்பிற்கு அடுத்த நெருக்கடி அளித்த ஈரான் News Lankasri
புஷ்பா 2 சாதனையை முறியடித்ததா துரந்தர் 2.. குறைந்த நாட்களில் ரூ. 1000 கோடி வசூல் செய்த படம் எது..? Cineulagam