அடுத்த ஆண்டில் ஒன்றரை மில்லியன் சுற்றுலாபயணிகளை வரவழைக்க திட்டம்
அடுத்த ஆண்டில் இலங்கைக்கு குறைந்தபட்சம் ஒன்றரை மில்லியன் சுற்றுலா பயணிகளை வரவழைப்பதற்கான திட்டமொன்றை அரசாங்கம் முன்னெடுத்துள்ளது.
சுற்றுலாத்துறை அபிவிருத்தி மற்றும் காணி அமைச்சர் ஹரின் பெர்னாண்டோ இதனை அறிவித்துள்ளார்.

வெளிநாட்டு சுற்றுலா பயணிகளின் வருகை அதிகரிப்பு
தற்போதைக்கு தென்னிலங்கையின் காலி உள்ளிட்ட பிரதேசங்களில் கூடுதலான சுற்றுலாத் தலங்கள் அபிவிருத்தி செய்யப்பட்டு வருகின்றன.

அங்கு வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகளின் வருகையும் அதிகரித்துள்ளது
அதற்கு மேலதிகமாக வடக்கில் பாரிய பொழுதுபோக்குப் பூங்கா மற்றும் கிழக்கின் மட்டக்களப்பில் சுற்றுலா நகரம் ஒன்றை அமைக்கவும் அரசாங்கம் கவனம் செலுத்தியுள்ளது.
இவ்வாறான திட்டங்களின் மூலம் அடுத்த ஆண்டில் குறைந்த பட்சம் ஒன்றரை மில்லியன் வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகளை இலங்கைக்கு வரவழைக்கும் திட்டமொன்றை அரசாங்கம் முன்னெடுத்துள்ளது.
குணசேகரன் பற்றி வெளிவந்த ரகசியம், கடும் ஷாக்கில் பெண்கள்.. எதிர்நீச்சல் தொடர்கிறது புரொமோ Cineulagam
யார் இந்த கிரிஜா? பிரபல நடிகருடன் நெருக்கமான காட்சிகள், திடீர் ட்ரெண்டிங், முழு விவரம்... Cineulagam
Numerology: இந்த தேதியில் பிறந்தவர்கள் இன்ப துன்பங்களை மறந்து வாழ்வார்களாம்.. உங்க தேதியும் இருக்கா? Manithan