பணவீக்கம் காரணமாக உணவுப் பொருட்களை கொள்ளையிடும் சம்பவங்கள் அதிகரிப்பு:பொலிஸ்
நாட்டில் ஏற்பட்டுள்ள கடுமையான பணவீக்கம் காரணமாக உணவுப் பொருட்களை கொள்ளையிடுவது இரண்டு மடங்காக அதிகரித்துள்ளதாக பொலிஸ் தரப்பு தகவல்கள் தெரிவிக்கின்றன.
பணவீக்கம் அதிகரிப்பால் உணவுவை கொள்ளையிடும் மக்கள்

தோட்டங்களில், மரங்களில் விளைந்துள்ள உணவுகளை கொள்ளையிடுவது அதிகரித்துள்ளதாக கூறப்படுவதுடன் பல சம்பவங்கள் தொடர்பாக பொலிஸாருக்கு தகவல் கிடைத்துள்ள போதிலும் முறைப்பாடுகள் முறையாக கிடைக்கவில்லை என தெரியவருகிறது.
அதேவேளை சிறப்பு அங்காடிகள் உட்பட பல்வேறு வர்த்தக நிலையங்களில் உணவு பொருட்களை கொள்ளையிட்ட ஆயிரக்கணக்கான சம்பவங்கள் நாட்டின் பல பகுதிகளில் நடந்துள்ளன என பொலிஸ் தலைமையகம் தெரிவித்துள்ளது.
வர்த்தக நிலையங்களில் உணவுப் பொருட்களை கொள்ளையிடும் சம்பவங்கள் அதிகரித்திருப்பதை காணக்கூடியதாக உள்ளது என பொலிஸ் உயர் அதிகாரி ஒருவர் கூறியுள்ளார்.
சமைக்கப்பட்ட உணவும் கொள்ளையிடப்பட்டுள்ளது

சமைக்கப்பட்ட உணவு அதாவது சோற்றுப் பாணைகள் போன்றன திருடப்பட்ட சில சம்பவங்கள் அண்மையில் நடந்துள்ளன.
பணவீக்கம் காரணமாக மூன்று வேளைக்கு பதிலாக ஒரு வேளை அல்லது இரண்டு வேளை சாப்பிடும் குடும்பங்களின் எண்ணிக்கை 10 லட்சத்திற்கும் மேல் அதிகரித்துள்ளதாக பேராதனை பல்கலைக்கழகம் நடத்திய ஆய்வொன்றில் அண்மையில் தகவல் வெளியாகியது.
அதிக நம்பிக்கை துரோகங்களை சந்திப்பவர்கள் இந்த தேதிகளில் பிறந்தவர்கள் தானாம்! ஏன்னு தெரியுமா? Manithan
என் இந்திய மனைவி, இந்த பாகிஸ்தானி., இவர்கள்தான் என் வாழ்க்கையின் இரண்டு முக்கியமான மனிதர்கள்: வான்ஸ் News Lankasri
திரையுலகில் புதிய டிரெண்ட்... புதிய எலக்ட்ரிக் கார் வாங்கிய பிரபுதேவா! விலை எவ்வளவு தெரியுமா? Manithan
வசூல் வேட்டையில் சமந்தாவின் 'எங்கள் தங்கம்' திரைப்படம்.. 3 நாட்கள் பாக்ஸ் ஆபிஸ் ரிப்போர்ட் Cineulagam