இலங்கைக்கு புலம்பெயர் தொழிலாளர்கள் அனுப்பிய டொலரின் அளவு அதிகரிப்பு
கடந்த மாதத்தில் இலங்கைக்கு புலம்பெயர் தொழிலாளர்கள் அனுப்பிய பணத்தின் அளவு 359 மில்லியன் அமெரிக்க டொலர்களாக அதிகரித்துள்ளது.
அமைச்சர் மனுஷ நாணயக்கார இதனை தெரிவித்துள்ளார். தனது டுவிட்டர் பக்கத்தில் விடுத்துள்ள பதிவொன்றில் அவர் இதனை குறிப்பிட்டுள்ளார்.
359 மில்லியன் அமெரிக்க டொலர்களாக அதிகரிப்பு
இதன்படி, ஆகஸ்ட் மாதத்தில் 325 மில்லியன் அமெரிக்க டொலர்களாக இருந்த புலம்பெயர் தொழிலாளர்களின் பணம் செப்டெம்பர் மாதத்தில் 359 மில்லியன் அமெரிக்க டொலர்களாக அதிகரித்துள்ளது.
இது ஆகஸ்ட் 2022 இல் பெறப்பட்ட தொகையுடன் ஒப்பிடுகையில் 10 வீத (34 மில்லியன்) அதிகரிப்பு என்றும், கடந்த ஜூலை மாதத்துடன் ஒப்பிடுகையில் இது 29 வீத (80 மில்லியன்) அதிகரிப்பு என்றும் அமைச்சர் குறிப்பிட்டார்.
Sri Lanka’s Workers remittances increased to US$ 359 million in September 2022 from US$ 325 million in August 2022. This is a 10% (USD 34Mn) increase compared to the inflows recorded in August 2022 and 29% (USD 80 Mn) increase compared to the inflows recorded in July 2022. pic.twitter.com/ZYJABGk3KS
— Manusha Nanayakkara (@nanayakkara77) October 7, 2022