வவுனியாவில் டெங்கு நுளம்பு பரவும் ஆபத்து அதிகரிப்பு
வவுனியாவில் பரவலாக மழையுடனான காலநிலை அதிகரித்து காணப்படுகின்றது.
எனவே இக்கால நிலையால் டெங்கு நுளம்பு பெருகும் வாய்ப்புக்கள் அதிகரித்து காணப்படுகின்றது .
பொதுமக்கள் தமது இருப்பிடங்கள் வசிப்பிடப்பகுதிகளை சுத்தம் செய்து துப்பரவாக்கி டெங்கு நுளம்பு பெருகும் இடங்களை இனங்கண்டு அழிப்பதற்குரிய நடவடிக்கையினை மேற்கொள்ளுமாறு சுகாதார பகுதியினால் அறிவுறுத்தப்பட்டு வருகின்றன .
மேல் மாகாணத்தில் டெங்கு நுளம்பு தாக்கம் அதிகரித்து காணப்படுகின்றன . இங்கிருந்தும் பல்வேறு தேவைகளிற்காக மேல் மாகாணங்களுக்கு சென்று வருபவர்கள் வேலையின் நிமித்தம் செல்பவர்கள் எனப்பல்வேறு தேவைகளிற்காக சென்று வருபவர்கள் அவதானமாக செயற்படுமாறும் கொரோனாவிற்கான அறிகுறிகள் டெங்கு நோய்த் தொற்று அறிகுறிகள் ஒத்தவையாக காணப்படுகின்றது .
அண்மைய சில தினங்களாக வவுனியாவில் பரவலாக மழையுடனான கால நிலை அதிகரித்து செல்கின்றன . இதனால் டெங்கு நுளம்புகளின் பெருக்கம் அதிகரிக்கும் நிலை ஏற்பட்டுள்ளது .
பொதுமக்கள் தமது இருப்பிடங்கள் சுத்தம் செய்து துப்பரவாக்கி வைப்பதுடன், டெங்கு நுளம்பு குழம்பிகள் பெருக்கத்தை கட்டுப்படுத்த பொதுமக்கள் தமது ஒத்துழைப்புக்களை வழங்குமாறு சுகாதார பிரிவினரால் வீடுகளுக்கு சென்று அறிவுறுத்தல்கள் வழங்கப்பட்டு வருகின்றன .
அதிர்ச்சி செய்தி சொன்ன பிறகு ஈஸ்வரிக்கு குட் நியூஸ் சொன்ன அப்பத்தா.. எதிர்நீச்சல் தொடர்கிறது சீரியல் புரொமோ Cineulagam
முதல் நாளிலேயே மாஸ் வசூல் வேட்டை செய்துள்ள பிரதீப்பில் லவ் இன்சூரன்ஸ் கம்பெனி... செம கலெக்ஷன் Cineulagam
அடுத்த சில வாரங்களுக்குள்... ஈரானுக்கு சீனாவின் பேருதவி: அமெரிக்க உளவுத்துறை வெளிப்படை News Lankasri
கப்பல்களுக்கு சுங்கக் கட்டணம் வசூலிக்கும் ஈரான்... இந்தியாவிடமிருந்து எவ்வளவு வசூலிக்கிறது? News Lankasri