அதிகரிக்கும் சைபர் குற்றச் செயல்கள்: விடுக்கப்பட்டுள்ள எச்சரிக்கை
இந்த வருடத்தின் இதுவரையான காலப்பகுதியில் 2,500 சைபர் குற்றச் செயல்கள் பதிவாகியுள்ளதாக இலங்கை கணினி அவசர தயார்நிலைக் குழுவின் அதிகாரி சாருக்க தமுனுபொல தெரிவித்துள்ளார்.
அத்தோடு, அவற்றில் 164 சம்பவங்கள் இணைய மோசடிகளுடன் தொடர்புடையது எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
இதன்போது, 162 கணக்குகள் முடக்கம் செய்யப்பட்டதுடன் 291 போலி கணக்குகள் அடையாளம் காணப்பட்டுள்ளது எனவும் சாருக்க தமுனுபொல கூறியுள்ளார்.
டிஜிட்டல் பயன்பாடு
இந்தநிலையில், சிறுவர்கள் தொடர்பான ஏழு ஒன்லைன் பாலியல் சீண்டல் சம்பவங்களும் பதிவாகியுள்ளதாகவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
மேலும், அதிகரித்து வரும் டிஜிட்டல் பயன்பாடு சைபர் பாதுகாப்பு விழிப்புணர்வை ஊக்குவிப்பதில் விரைவான நடவடிக்கையின் அவசியத்தை எடுத்துக்காட்டுகிறது என தமுனுபொல எச்சரித்துள்ளார்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |

தனக்கு இப்படி நடந்தது எப்படி, அதனை கண்டுபிடித்த ஆனந்தி.. சிங்கப்பெண்ணே சீரியல் பரபரப்பு புரொமோ Cineulagam

திருமணமான 7 நாட்களில் கணவன் உயிரிழப்பு.., தேனிலவு கொண்டாட காஷ்மீர் வந்தபோது துப்பாக்கிச்சூடு News Lankasri

Baakiyalakshmi: தூக்கி வீசப்பட்ட மாமனார் புகைப்படம்! சுதாகருக்கு பாக்கியா விடுத்த எச்சரிக்கை Manithan

viral video: சிறுவனின் மடியில் ஒய்யாரமாக ஓய்வெடுக்கும் ராட்சத மலைப்பாம்பு! மெய்சிலிர்க்கும் காட்சி Manithan
